தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் பிராமணர் அல்லாத அர்ச்சர்கள் நியமிக்கப்பட்ட விவகாரத்தில் திமுக அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பல்வேறு கோயில்களில் பிராமணர் அல்லாதவர்களை அர்ச்சகர்களாக நியமித்து உத்தரவு பிறப்பித்திருந்தார்.
மாநிலத்தின் இந்து சமய அறநிலையத் துறை 208 அர்ச்சகர்களுக்கு பணி நியமனக் கடிதங்களை வழங்கியது.
இந்த உத்தரவுக்கு பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இடைக்காலத் தடை கோரினார்.
அந்த மனுவில் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகர்களன இவர்கள் விதித்துள்ள உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். மேலும் பிராமணர்களை கோயில்களில் இருந்து வெளியேற்றும் முயற்சி எனவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
29 8 2022
source https://tamil.indianexpress.com/tamilnadu/sc-seeks-response-from-tamil-nadu-on-government-appointing-non-brahmin-priests-502041/