26 8 2022
பிரிவினை வாதத்தையும் வெறுப்பு அரசியலை தூண்டுவோர் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என தமீமுன் அன்சாரி கூறினார்.
தொடர்ந்து, “பேரிடர் அதிகம் ஏற்படும் நீலகிரி மாவட்டத்தில் பேரிடம் மீட்பு குழுவை மத்திய அரசு நிரந்தரமாக அமைக்க வேண்டும் எனவும் மேட்டுப்பாளையத்தில் மனித நேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி கோரிக்கை விடுத்தார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிமுன் அன்சாரி, தமிழக சிறைகளில் ஆயுட்கால தண்டனைகளை அனுபவித்து வரும் கைதிகளுக்காக சட்டமன்றத்திற்கு வெளியேயும் உள்ளேயும் கடந்த ஏழு ஆண்டுகளாக எங்கள் கட்சி போராடி வருகிறது.
எனவே தமிழக சிறைகளில் உள்ள ஆயுட்கைதிகளை அண்ணாபிறந்தாள், காந்தி பிறந்தநாள் போன்ற நேரங்களில் ஜாதி, மத பேதமின்றி கருனை அடிப்படையில் விடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி செப்டம்பர் 10ஆம் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிடவுள்ளோம்” என்றார்.
மேலும் சமீபகாலமாக மழை காலங்களில் அதிக பேரிடர் ஏற்படும் பகுதியாக நீலகிரி மாவட்டம் உள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இங்கு மத்திய அரசு பேரிடர் மீட்பு குழுவை நிரந்தரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் திராவிட கட்சிகள் ஆட்சியில் சிறுபாண்மை மக்களுக்கு எப்போதும் பாதுகாப்பு உண்டு. தமிழகம் அனைத்து மத மக்களும் அனைத்து ஜாதியினரும் இணைந்து வாழும் பகுதி, வடமாநிலங்களை ஒப்பிடும்போதுஇங்கு அனைவரும் ஒற்றுமையாக இருக்கின்றனர்.
அப்படி ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டாலும் மக்களே அதனை சரிசெய்யும் பக்குவத்தை தமிழக மக்கள் பெற்றுள்ளனர். அதேநேரம் பிரிவினை வாதத்தை, வெறுப்பை,கோபத்தை தூண்டுவோர் யாராக இருந்தாலும் அது சிறுபாண்மையை சேர்ந்தவராக இருந்தாலும் பெரும்பான்மையை சேர்ந்தவராக இருந்தாலும் மக்கள் அவர்களை புறக்கணிப்பது டன் அவர்களை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் ”எனக் கூறினார்.
செய்தியாளர் பி. ரஹ்மான்
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamimun-ansari-says-whoever-instigates-hate-politics-needs-action-500418/