Tamil Nadu the Nilgiris hills bags awards in 2022 outlook travelers award| நீலகிரி மற்றும் குன்னூர் மலைகள், இந்தியாவின் ‘சிறந்த மலை மற்றும் மலைக் காட்சிகள்’ இடத்திற்கான 2022 அவுட்லுக் டிராவலர் வெள்ளி விருதுகளைப் பெற்றுள்ளது..
‘அவுட்லுக் டிராவலர் விருதுகள் 2022’ – தொற்றுநோய்க்குப் பின் நியூ நார்மல் ஆக மாறியுள்ள பயணத் துறையில் ஏற்பட்ட மாற்றங்களை முன்னிலைப்படுத்துவதில் இந்த ஆண்டு பதிப்பு கவனம் செலுத்தியது. சிறந்த சுற்றுச்சூழல் தலம், சிறந்த வனவிலங்குத் தலம், சிறந்த சாகசத் தலம், சிறந்த விழாத் தலம் உள்ளிட்ட 11 வெவ்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
இந்திய சுற்றுலாத் துறையைச் சேர்ந்த நட்சத்திர நடுவர் குழுவால் விருதுகள் மதிப்பீடு செய்யப்பட்டன.
அதன்படி,அசாமின் காசிரங்கா தேசியப் பூங்கா & புலிகள் காப்பகம் ‘இந்தியாவின் சிறந்த வனவிலங்கு இடத்திற்கான’ தங்க விருதை வென்றது. சிக்கிமின் பெல்லிங் & காஞ்சன்ஜங்கா ‘இந்தியாவின் சிறந்த மலை/மலைக் காட்சிகள் இடத்திற்கான’ தங்க விருதைப் பெற்றுள்ளது.
‘இந்தியாவின் சிறந்த இயற்கை எழில் கொஞ்சும் டிரைவ் டெஸ்டினேஷன்’ என்ற தங்க விருது சிக்கிமின் காங்டாக் முதல் லேக் சோம்கோ மற்றும் நாது-லா பாஸ் வரை வழங்கப்பட்டுள்ளது.
மேகாலயாவின் மவ்லின்னாங் மற்றும் நாகாலாந்தின் கோனோமாவுக்கு முறையே ‘இந்தியாவின் சிறந்த சுற்றுச்சூழல். சுற்றுலா தலத்திற்கான’ வெள்ளி விருதும், ‘இந்தியாவின் சிறந்த ஆஃப்பீட் டெஸ்டினேஷன்’ என்ற வெள்ளி விருதும் வழங்கப்பட்டுள்ளன.
இதுத்தவிர, பீகாரில் உள்ள போத்கயா; காஷ்மீரில் குல்மார்க்; தமிழ்நாட்டில் நீலகிரி மற்றும் குன்னூர்; சத்தீஸ்கரில் பஸ்தர்; உத்தரகாண்டில் உள்ள ரிஷிகேஷ்; அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஹேவ்லாக்; ஹோலி பண்டிகைக்காக உத்தரபிரதேசத்தில் மதுரா; துர்கா பூஜை திருவிழாவிற்கு மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா; மத்திய பிரதேசத்தில் மாண்டு; ராஜஸ்தானில் கும்பல்கர் மற்றும் சித்தோர்கர் கோட்டைகள்; லடாக்கில் ஜான்ஸ்கார்; மேற்கு வங்கத்தில் சுந்தர்பான்ஸ்; உத்தரபிரதேசத்தில் வாரணாசி; ஜம்மு & காஷ்மீரில் உள்ள குரேஸ் உள்பட பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.
source https://tamil.indianexpress.com/lifestyle/outlook-travelers-award-2022-nilgiri-coonoor-500180/