25 8 2022
ஐரோப்பாவில் கடும் வறட்சி – ஆய்வில் தகவல்
500 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறட்சியை எதிர்கொள்கிறது என ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பாவில் கடந்த 500 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான வறட்சியை எதிர்கொள்கிறது எனவும், மூன்றில் இரண்டு பங்கு உள்நாட்டு கப்பல் போக்குவரத்து, மின்சார உற்பத்தி மற்றும் சில பயிர்களின் விளைச்சல் குறைந்துள்ளது எனவும் ஐரோப்பிய யூனியன் ஏஜென்சி கடந்த 23ம் தேதி தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஆணையத்தால் மேற்பார்வையிடப்பட்ட ஆகஸ்ட் மாத அறிக்கையின் படி, ஐரோப்பியாவின் நிலைமை 47 சதவீதத்திற்கு கீழ் உள்ளதாகவும், மண்ணின் ஈரப்பதம் வெறும் 17 சதவீதம் மட்டுமே உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது, இதில் தாவரங்கள் மிகவும் பாதிக்கக்கூடும் எனவும் கூறி உள்ளனர் . மேலும், ” இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஐரோப்பாவின் பல பகுதியை தாக்கிய வறட்சியானது ஆகஸ்ட் மாத தொடக்கத்திலிருந்து தற்போது மேலும் விரிவடைந்து மோசமான நிலையில் உள்ளது” என்று ஆய்வு அறிக்கை கூறியுள்ளது.
மேற்கு ஐரோப்பா-மத்திய தரைக்கடல் பகுதி சாதாரண நிலைமையை விட வெப்பமாகவும் சில சமயங்களில் வறண்டதாகவும் இருக்கும். ஐரோப்பாவின் பெரும்பகுதி கோடையின் வெப்பநிலையை எதிர்கொண்டதால் வறட்சியை மோசமாக்கி காட்டுத்தீயை ஏற்படுத்தியுள்ளது. அதனால் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போதைய வறட்சி கடந்த 500 ஆண்டுகளில் மிக மோசமான அளவுக்கு தோன்றியுள்ளதாக, பருவத்தின் முடிவில் இறுதித் தரவின் மதிப்பீட்டை உறுதிப்படுத்தியது என்று ஆணையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்காச்சோளத்தின் விளைச்சல் கடந்த ஐந்து ஆண்டுகளை விட 16 சதவீதம் குறைந்துள்ளதாவும், சோயாபீன் மற்றும் சூரியகாந்தியின் விளைச்சல் 12 முதல் 15 சதவீதம் வரை மட்டுமே உள்ளதாகவும், நீர்மின் உற்பத்தி, தண்ணீர் பற்றாக்குறை என பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. .
source
https://news7tamil.live/severe-drought-in-europe-information-from-the-study.html