23 8 2022
Tamil Nadu News: தமிழக அரசு தரப்பில் விலைகளை ஏற்றுவதன் அடுத்த முடிவாக, தற்போது வாகன ஓட்டிகளுக்கு ஒரு செய்தி வந்துள்ளது.
அது என்னவென்றால், வாகனப் பதிவு மற்றும் ஓட்டுநர் உரிமம் வழங்குதல் ஆகிய போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணங்களை பத்து மடங்காக அரசு உயர்த்தியுள்ளது.
இதற்கு காரணம், மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்து வருவதனால் எடுக்கப்பட்ட முடிவு என்று கடந்த ஜூலை மாதம் 25ஆம் நாள் வெளியிட்டுள்ளனர்.
கட்டணங்கள் 10 மடங்காக உயர்ந்ததைக் குறித்து, மக்களின் கருத்துக்களை தெரிவிக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அவகாசம் முடிவடைந்ததும், கருத்திற்கு ஏற்றவாறு திட்டம் மாற்றியமைக்கப்படலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கட்டண உயர்வைப் பற்றி அரசு வெளியிட பட்டியலில், தற்காலிக வாகனப் பதிவு மற்றும் பதிவு நீட்டித்தலுக்கான கட்டணம் 50 ரூபாயிலிருந்து 200 ரூபாயாகவும், வேறு மண்டலங்களில் வாகனத் தகுதிச் சான்றுக் கட்டணம் 500 ரூபாயாகவும், தகுதிச் சான்றின் நகல் 250 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், தகுதிச் சான்று பெறாத வாகனங்களை திரும்பப் பெறுவதற்கான சி.எப்.எக்ஸ். நோட்டீஸின் கட்டணம் 30 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன ஆய்வாளர் அல்லது பதிவதிகாரியின் உத்தரவிற்கு எதிராக மேல் முறையீடு செய்யவேண்டும் என்றால், அதற்கான கட்டணம் 40 ரூபாயிலிருந்து 500 ரூபாயாகவும் வாகன ஆவணங்களுக்கான சான்றழிக்கப்பட்ட நகலைப் பெற 75 ரூபாயிலிருந்து 400 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த வார இறுதியில் இந்த கட்டண உயர்வு அமலாகும் என போக்குவரத்துத் துறை கூறியுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/driving-license-fee-hiked-by-tamil-nadu-government-498932/