செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா தொற்று 22 8 2022

 தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 591 பேருக்கு புதிதாக கொரோனா தொற்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைய தொடங்கியுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது. இருப்பினும் மக்கள் பொது இடங்களில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று 591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 603-ஐ விட குறைவாகும். இதனால், தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்து 63 ஆயிரத்து 913 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 696 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்து 20 ஆயிரத்து 38 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 5 ஆயிரத்து 842 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தாக்குதலுக்கு இன்று யாரும் உயிரிழக்கவில்லை. இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 33 என்ற அளவில் உள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

source https://news7tamil.live/declining-corona-infection-in-tamil-nadu.html

Related Posts:

  • Our Stength (function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src … Read More
  • முடி கொட்டுவதை நிறுத்த முத்தான சில டிப்ஸ் !! கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிர்வது நின்று, அடர்த்தியாக வளரும். மேலும் தலை குளிச்சியாகும். செம்பருத்தி பூவுடன் தேங்… Read More
  • பிரிவினைவாதம் இந்து ரா‌ஷ்ட்டிரம் அமைப்போம் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பேசுவதுதான் பிரிவினைவாதம் தி இந்து ராம் பேச்சு: பாஜக நாடு முழுவதும் தன் வல… Read More
  • பொடுகு என்பது ? உடலின் சூடும் தலையிலுள்ள தோல்பகுதிகளுக்கு எண்ணெய் பசையை குறைத்து விடுகின்றன. முடியை சீப்பினால் வாரும்போது வரண்ட தோலிலிருந்து செதில் செதிலாக உரிக… Read More
  • துனை இல்லாமல் சை‬ … Read More