ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் வேலை; 8-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

 தமிழகத்தில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் இளநிலை எழுத்தர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 19.09.2002க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Lower Division Clerk

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தட்டச்சு மற்றும் கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 19,500 – 62,000

Safaiwala

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,700 – 50,000

Male Nursing Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Diploma in Nursing and Midwifery படித்திருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ. 15,700 – 50,000

வயது தகுதி: 01.06.2022 அன்று 20 முதல் 30 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். OBC பிரிவினருக்கு வயது வரம்பில் 3 ஆண்டுகள் தளர்வு உண்டு.

தேர்வுக் கட்டணம் : ரூ.150. இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறனறி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://wellington.cantt.gov.in/recruitment/ என்ற இணையதளத்தில் APPLICATION TEMPLATE IN EXCEL FORMAT என்பதை கிளிக் செய்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி: cbwell.rect@gmail.com

மேலும் விவரங்களுக்கு https://wellington.cantt.gov.in/wp-content/uploads/sites/57/2022/08/RectNotice001.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.


source https://tamil.indianexpress.com/education-jobs/tamilnadu-wellington-cantonment-board-recruitment-2022-apply-soon-497362/