ஸ்மார்ட்போன் அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாததாக மாறிவிட்டது. ஷாப்பிங், உணவு டெலிவரி என எல்லாம் ஆன்லைன் மையமாகி விட்டது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப செல்போன் நிறுவனங்களும் புது புது அம்சங்கள் கொண்ட போன்களை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் போன் பேட்டரியின் தரத்தையும் உயர்த்தி வருகின்றனர். நீண்ட நேரம் போன் பேட்டரி செயல்படும் வகையில் மாற்றிவருகின்றனர். விலைக்கு ஏற்ப வசதிகள் மாறுபடும். இருப்பினும் நீண்ட நேரம் போன் பயன்படுத்தி வந்தீர்கள் என்றால் பேட்டரி தீர்ந்துவிடும். சார்ஜ் செய்யமுடியாத சூழலில் பவர் பேங்க் பயன்படும். குறிப்பாக வெளியில் செல்லும்போது சார்ஜ் செய்யமுடியாத சூழலில்
பவர் பேங்க் மிகவும் உதவியாக இருக்கும். அந்தவகையில் உங்கள் போனுக்கு ஏற்ற மற்றும் சிறந்த பவர் பேங்க் வாங்குவதற்கான சில டிப்ஸ் குறித்து இங்கு காணலாம்.
பேட்டரி தேர்வு
எந்த கேஜெட்டாக இருந்தாலும் முதலில் அதன் பேட்டரி திறனை பார்க்கவும். பேட்டரி திறன் mAh என குறிப்பிட்டிருக்கும். அதிக mAh நீண்ட நேரம் சார்ஜ் தாங்கும் வசதி கொண்டது. பவர் பேங்க் வாங்கும் போது முதலில் உங்கள் போன் அந்த பவர் பேங்க் பின்னுடன்(Pin) பொருந்துகிறதா என சரி பார்க்கவும். உங்கள் போன் பேட்டரி விட அதிக பேட்டரி திறன் கொண்ட பவர் பேங்க் வாங்குவது உகந்தது. உதாரணமாக உங்கள் போன் பேட்டரி திறன் 1,500 mAh எனில், 3,000 mAh திறன் கொண்ட பவர் பேங்கை வாங்க வேண்டும்.
இண்டிகேட்டர் அவசியம்
பவர் பேங்கில் எல்இடி இண்டிகேட்டர் இருப்பது அவசியம். இதன் மூலம் பேட்டரி நிலை மற்றும் சார்ஜிங் நிலை பற்றி தெரிந்து கொள்ளலாம். எனவே LED இண்டிகேட்டர் லைட் உள்ள பவர் பேங்க்கை தேர்வு செய்யவும்.
லித்தியம்-பாலிமர் பேட்டரி
கேஜெட்டுகள் முறையாக பராமரிக்க வேண்டும். பலர் இரவில் போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு உறங்கிவிடுவர். போன் ஃபுல்சார்ஜ் ஆன போதும் சார்ஜிங் ஒயரில் கனெக்ட் ஆகி இருக்கும். ஃபுல்சார்ஜ் ஆனவுடன் சார்ஜிங்கிலிருந்து எடுத்துவிடுவது போன் பாதுகாப்பை மேம்படுத்தும். லித்தியம்-பாலிமர் பேட்டரிகள் ஆபத்தானவை. பவர் பேங்க் ஃபுல்சார்ஜ் ஆனவுடன் சார்ஜிங்கிலிருந்து எடுப்பது நல்லது. அதிகம் சார்ஜ் செய்வதால் வெடிக்கும் ஆபத்து இருப்பதாக கூறப்படுகிறது.
கேபிள் தரம்
உயர் தரத்துடன் உள்ள கேபிள் பார்த்து வாங்க வேண்டும். உயர்தர கேபிள் கேட்ஜெட்டை அதிக வெப்பமடையாமல் பாதுகாக்கிறது. உங்கள் பவர் பேங்க்குடன் வரும் கேபிள் தரமானதாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பவர் பேங்க்குடன் வரும் கேபிளை கேஜெட்களை சார்ஜ் செய்வதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்.