அசோக் கெலாட்டிடம் காங்கிரஸை வழிநடத்த வேண்டும் என்று சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், ராஜஸ்தான் முதலமைச்சர் ராகுல் காந்தியைத் தலைமையேற்க விரும்புவதாகச் சொல்லப்படுகிறது.
செப்டம்பர் 21-ஆம் தேதிக்குள் புதிய கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான இறுதி அட்டவணையை அறிவிக்கக் காங்கிரஸ் தயாராகி வரும் நிலையில், தற்போதைய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெட்டைக் கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, அவரிடம் காங்கிரஸை வழிநடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், காங்கிரஸ் கட்சி கடந்த 23 வருடங்களில் மிகப்பெரிய மாற்றத்திற்குத் தயாராகி வருவதாகவும், நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கி உள்ளதாகவும் பேசப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை நடக்க உள்ள காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தேர்தல் எப்போது நடக்கும் என்று அறிவிப்பு வெளியிடப்படும். இந்த தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்ற முடிவைக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்த்துவிட்டார். ராகுல் காந்தியும் தேர்தல் தோல்விகள் மற்றும் ஜி 23 தலைவர்களின் எதிர்ப்பு காரணமாகத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்ற முடிவை எடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சோனியா காந்தி நேற்று ராஜஸ்தான் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட்டை சந்தித்து காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிடும்படி கூறியதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 71 வயது நிரம்பிய மூத்த தலைவரான அசோக் கெலாட், சோனியா ஆதரவுடன் தலைவர் பதவிக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், ராஜஸ்தான் முதலமைச்சர் ராகுல் காந்தியைத் தலைமையேற்க விரும்புவதாகச் சொல்லப்படுகிறது.
24 8 2022
source https://news7tamil.live/who-will-be-the-next-congress-leader-sonia-gandhi-put-an-end-to-it.html