புதன், 31 ஆகஸ்ட், 2022

லாக்அப் மரணம்: குஜராத் இரண்டாவது முறையாக முதலிடம்

 30 8 2022

குஜராத் மாநிலத்தில் இரண்டாவது முறையாக லாக்அப் டெத் என்னும் காவல் மரணங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

2021ஆம் ஆண்டில் நாடு முழுக்க 88 லாக்அப் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் அதிகப்பட்சமாக குஜராத்தில் 23 காவல் மரணங்கள் நடந்துள்ளன. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 53 சதவீதம் அதிகமாகும்.
2020ஆம் ஆண்டில் குஜராத்தில் 15 காவல் மரணங்கள் நிகழ்ந்தன. குஜராத்துக்கு அடுத்தபடியாக லாக்அப் மரணங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா 21 மரணங்களுடன் 2ஆம் இடத்தில் உள்ளது.

குஜராத்தில், 23 பேர் காவலில் வைக்கப்பட்டபோது மரணித்துள்ளனர். இதில், 22 இறப்புகள் போலீஸ் காவலில் அல்லது ரிமாண்டில் வைக்கப்படாத போது நிகழ்ந்துள்ளது. அதே நேரத்தில் ஒருவர் போலீஸ் காவலில் இறந்துள்ளார்.

மேலும் 9 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்றும், 9 பேர் நோயினால் மரணித்தனர் என்றும், இருவர் போலஸ் தாக்கியதில் உயிரிழந்தனர் என்றும் ஒருவர் தப்பிக்க முயன்றபோது இறநதார் என்றும் லாக்அப் காரணங்களாக கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு குஜராத்தில் லாக்அப் மரணங்கள் தொடர்பாக 12 காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் 2020ஆம் ஆண்டு இதுபோன்ற வழக்குகள் ஏதுவும் பதியப்படவில்லை. மேலும் 2020ஆம் ஆண்டில் காவல் துறையினர் தாக்கியதில் யாரும் மரணிக்கவில்லை எனக் கூறப்பட்டது.

நாடு முழுக்க 2020இல் 75 லாக்அப் மரணங்கள் நிகழ்ந்தன. இந்தத் தகவல்கள் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/india/gujarat-records-highest-number-of-custodial-deaths-for-second-year-502111/