புதன், 31 ஆகஸ்ட், 2022

உங்க பெயரில் போலி சிம் கார்டு.. கண்டுபிடிப்பது, நீக்குவது எப்படி?

 ஆதார் கார்டு அனைத்திருக்கும் பயன்படுத்தப்படுகிறது. வங்கி, பான் கார்டு, ரயில் டிக்கெட் என எல்லாவற்றிக்கும் பயன்படுத்தப்படுகிறது. அந்தவகையில் உங்கள் போனுக்கு சிம் கார்டு வாங்குவதற்கும் ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது. ஆதார் கார்டு முக்கிய ஆவணமாக மாறிவிட்டது. முன்பு ரேஷன் கார்டு இருந்தது போல் இப்போது ஆதார் கார்டு மாறிவிட்டது.

அந்தவகையில் உங்கள் பெயரில் வாங்கப்பட்ட போலி சிம் கார்டுகளையும் எளிதாக கண்டுபிடித்து நீக்கலாம். ஒரு ஆதார் கார்டு பயன்படுத்தி எத்தனை சிம்கார்டுகள் வாங்கலாம்? என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் இது குறித்த விளக்கம் கொடுத்துள்ளது. ஆதார் மோசடிகளை தடுப்பதற்கென்று பிரத்யேகமாக ஓர் இணைய தளத்தை உருவாக்கியுள்ளது. அந்த தளத்தில் இருந்து ஆதார் தொடர்பான மோசடிகளுக்கு விளக்கத்தையும், தீர்வையும் உடனடியாக பெற்றுக் கொள்ளலாம்.

மத்திய அரசு இணையதளம்

முதலில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறையின் இணையதளமான tafcop.dgtelecom.gov.in பக்கத்துக்குச் செல்ல வேண்டும்.
அதில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
இதன்பிறகு உங்கள் மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பபடும்.
மொபைல் எண்ணுக்கு வந்த ஓடிபியை அங்கு உள்ளிட வேண்டும்.
இப்போது உங்கள் ஆதார் கொண்டு வாங்கப்பட்ட மொபைல் எண்கள் காண்பிக்கப்படும்.
ஒருவேளை நீங்கள் வாங்காத மொபைல் எண் அதில் இருந்தால், நீக்கவும் கோரலாம்.

ஒரு நபரின் ஆதார் கார்டு கொண்டுஅதிகபட்சமாக 9 மொபைல் எண்கள் வாங்கிக் கொள்ள முடியும். அவற்றில் நீங்கள் வாங்காத மொபைல் எண்கள், உங்கள் ஆதாரைக் கொண்டு வாங்கப்பட்டிருந்தால் ரிப்போர்ட் செய்து பிளாக் செய்ய முடியும். அதற்கான வழிமுறைகளும் tafcop (https://tafcop.dgtelecom.gov.in/)இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய அரசின் இணையதளம் வாயிலாக உங்க பெயரில் உள்ள போலி சிம் கார்டுகளை கண்டறிந்து எளிமையாக நீக்கிக் கொள்ளலாம்.

source https://tamil.indianexpress.com/india/ganesh-chaturthi-bengaluru-idgah-ground-sc-orders-status-quo-502699/