29 8 2022
தங்கம் விலை இன்று கிராமுக்கு 35 சரிந்து சவரனுக்கு ரூ.280 வரை சரிந்து விற்பனையாகிறது.
சர்வதேச நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் வெள்ளி விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அந்த வகையில், இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.35 வரை சரிவை சந்தித்து கிராம் ரூ.4770 ஆக உள்ளது.
24 காரட் 99.99 தூயத் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.5172 ஆக நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.41376 ஆக உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இது உச்சப்பட்ச சரிவு ஆகும்.
வெள்ளி விலை
வெள்ளி விலையும் தன் பங்குக்கு அதிரடியாக விலை வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த காலங்களில் கிராம் ரூ.64 வரை விலை ஏற்றம் கண்டு இன்று கிராம் ரூ.60 ஆக உள்ளது. இதுவும் மாதத்தில் உச்சப்பட்ச சரிவு ஆகும்.
தற்போது கிலோ பார் வெள்ளி ரூ.60ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று கிராம் ரூ.60.70 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆக கிலோவுக்கு ரூ.700 சரிந்துள்ளது. நாட்டின் மற்ற நகரங்களான பெங்களூருவில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4575 எனவும், டெல்லியில் ரூ.4803 எனவும் உள்ளது.
அந்த வகையில் 10 கிராம் தங்க நிலவரம்
- மும்பை ரூ.47,700
- கொல்கத்தா ரூ.47,150
- பெங்களூரு ரூ.47200
- ஹைதராபாத் ரூ.47150
- கேரளா ரூ.47150
- விஜயவாடா ரூ.47150
- பாட்னா ரூ.47180
- புனே ரூ.47180
- ஜெய்ப்பூர் ரூ.47300
- வதோதரா ரூ.47180
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை ஒரு லிட்டருக்கு (பெட்ரோல்- 102.63 ரூபாய்க்கும், டீசல்- 94.24 ரூபாய்க்கும்) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 100வது நாளாக இன்றும் எண்ணெய் நிறுவனங்கள் எந்த மாற்றமும் இல்லாமல் இதே விலையில் விற்பனை செய்கிறார்கள்.
source https://tamil.indianexpress.com/business/petrol-diesel-price-in-chennai-29th-august-501832/