செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

சிறை வாழ்க்கையைவிட பரோலில் அதிக காலம் செலவிட்ட பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள்

 

பில்கிஸ் பானு வழக்கில் தற்போது விடுதலை ஆகி இருக்கும் குற்றவாளிகள் தண்டனை காலத்தின்போது, அடிக்கடி பரோலில் வெளியே வந்ததாக கூறப்படுகிறது. பரோலில் வெளியே சென்ற காலத்தில் வழக்குக்கு தொடர்புடைய சாட்சிகளை மிரட்டி உள்ளதாக சமந்தபட்ட நபர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வருடம் ஏர்பல் மாதத்தில், குஜராத் உயர்நீதிமன்றம் பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளியான ராதேஷ்யாம் ஷாவின் பரோல் மனுவை தள்ளுபடி செய்தது. அவர் புது வீடு கட்டும் விழாவிற்காக 28 நாட்கள் பரோல் கேட்டு மனு அளித்திருந்தார். நீதிபதி  ஏ எஸ் சபீஹியா கூறுகையில் “ எந்த காரணத்திற்காக அவர் பரோல் கேட்ருக்கிறார் என்பதை கருத்தில் கொண்டு அதை அனுமதிக்க முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் ஜனவரி 29 முதல் மார்ச் 30 வரை இந்த ஆண்டு பரோலில் வெளியே சென்றுள்ளார் என்பதை நீதிபதி மேற்கோள் காட்டியுள்ளார்.

மேலும் இவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் 2011ம் ஆண்டு தனது தாயின் மூட்டு அறுவை சிகிச்சைக்காக பரோல் கேட்டது நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரோல் வழங்க மறுத்துள்ளனர்.

மேலும் உச்சநீதிமன்றத்தில்  ராதேஷ்யாம் ஷா தாக்கல் செய்த மனுவால்தான், 1992ம் ஆண்டு வழிகாட்டுதல்படி, ஆயுள் தண்டனை கைதிகளை முன்பாகவே விடுதலை செய்யலாம் என்ற விதியின்படி குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இதுவே 11 பேர் விடுதலைக்கு காரணமாகி உள்ளது.

ஆக்ஸ்டு 15ம் தேதி குஜராத் அரசு, சிறை ஆலோசனைக் குழு வழங்கிய நன்னடத்தை பரிந்துரையின்படி 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது.

2019ம் ஆண்டு மே மாதத்தில், இதே வழக்கில் தொடர்புடைய கேஷர்  வொஹனியாவின் பரோல் மனுவை குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி உமேஷ் த்ரிவேதி தள்ளுபடி செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் “ 2018ம் ஆண்டில் ஆகஸ்டு 12 முதல் செப்டம்பர் 20 வரை 50 நாட்களும், 2019ம் ஆண்டு பிப்ரவரி 10 முதல் மார்ச் 23 வரை 40 நாட்களும் பரோலில் வெளியே வந்துள்ளார் என்று அவர் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2017 முதல் 2020 வரை பில்கிஸ் பானுவழக்கின் தொடர்புடைய சாட்சிகளும் மற்றும் ரந்திக்பூர் உள்ள குடியிருப்பு வாசிகளும், வழக்கில் சமந்தபட்ட குற்றவாளிகள் அடிக்கடி பரோலில் வந்து, சாட்சிகளை மிரட்டுகிறார்கள் என்று குஜராத் காவல்துறையினருக்கும். குஜராத் மாநில உள்துறை அமைச்சர் பிரதீப் சிங் ஜடேஜாவிடம் புகார் அளித்துள்ளனர்.  

பில்கிஸ் பானு வழக்கில் சாட்சிகளின் சார்பாக, அப்துல் ரசக் மன்சுரி என்பவர் குஜராத் மாநில உள்துறை அமைச்சர் பிரதீப் சிங் ஜடேஜாவிடக்கு 5 பக்கம் கொண்ட கடிதத்தை எழுதி உள்ளார். இதில் “ வழக்கில் குற்றம் சாட்டபட்டவர்கள் பரோலில் வெளியே வந்தபோது, அரசியல் நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளனர். அவர்கள் வியாபாரம் மற்றும் அனைத்துவிதமான செயல்பாடுகளிலும் ஈடுபடுகின்றனர். மேலும் வழக்கின் சாட்சிகளை மிரட்டுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த கடிதம் தொடர்பாக அமைச்சர் பிரதீப் சிங் ஜடேஜாவிடம் கேட்டபோது, அப்படி ஒரு கடிதம் வந்ததாக தனக்கு நினைவில் இல்லை என்றும் அவர்கள் கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில் பரோலில் வெளிவந்தபோது கலந்துகொண்டது தொடர்பாக தனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியுள்ளார்.

பைரோஸ் கஞ்சி என்பவர், பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்ற 11 பேர் எவ்வளவு மூறை பரோலில் வெளியே வந்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம்  கேட்டுள்ளார். ஆனால் இது முன்றாம் நபர் சார்ந்த தகவல் என்றும் இதில் சமந்தபட்ட நபர்களின் அனுமதி பெற்ற பிறகே இத்தகவலை வழங்க முடியும் என்று  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


source https://tamil.indianexpress.com/india/convicts-in-bilkis-bano-case-came-out-on-frequent-parole-498081/