பல்கலைக் கழக துணை வேந்தர்கள் நியமனத்தை, மாநில அரசே மேற்கொள்ளும் சட்ட வரைவிற்கு ஒப்புதல் மறுத்து ஆளுநர் அடம் பிடிப்பதாக சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
மேலும், இந்த பின்னணியில்தான் மாநில அரசுக்கு புதிய சட்டம் நிறைவேற்றிடும் தேவை எழுந்தது. எனவே, ஆளுநர் தனது நாடகத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ள அவர், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அதிகாரத்தைக் குறுக்கு வழியில் பறிக்க முயற்சிக்கும் ஒன்றிய ஆட்சியாளர்களின் தொடர் ஆதிக்கத்தை சி.பி.ஐ(எம்) வன்மையாகக் கண்டிக்கிறது எனவும், மாநில அரசின் சட்டத்திற்கு உடனே அனுமதியளிக்க வேண்டுமென வற்புறுத்துகிறோம் எனக் கூறியுள்ளார்.
source https://news7tamil.live/the-state-governments-law-should-be-approved-immediately-cpim-hits-out-at-governor.html