இந்திய அரசியலமைப்பு சாசனம் -1950 IDIAN CONSTITUTION ACT - 1950 கோட்பாடு 226 (1) ன் கீழ் நீதிபேராணை வழக்குகளை தொடுக்கும் உரிமை ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்கம், மற்றும் அரசு துறை சார்ந்த, நிறுவனங்களுக்கு எதிராகவோ அல்லது அரசு தலையிட்டு நடத்த வேண்டிய காரியங்களை செய்யாமல் விட்டாலோ கடமை தவறிய அரசூழியர்களினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மாதிரியான பிரச்னைகளுக்கு நீதி வேண்டி நீதி பேராணை வழக்குகளை பதிவு செய்யலாம்.
WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, உயர்நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக தாக்கல் செய்யும் மனு தான் ரிட்!
எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்?
பொது நலன் பாதிக்கப்படும் போது, பொது நல வழக்குகள் (Public Interest Litigation) தொடரலாம்.
உதாரணமாக உங்கள் பகுதியில் சாலை மோசமாக இருந்தாலோ அல்லது புதிய சாலை அமைக்க கோரி அந்தப் பகுதியின் அதிகாரத்திற்குட்பட்ட அரசுத்துறைகளுக்கு ஒரு மனு கொடுத்தும், அவர்கள் எதுவும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால், அந்தத் துறைக்கு சாலை அமைக்க உத்தரவு போடச் சொல்லி அரசாங்கத்தைக் கேட்கலாம்.
தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர், கழிவுகள், புகையினால் பொது மக்களுக்கும் சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு ஏற்பட்டால் அருகில் இருக்கும் மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில் புகார் செய்யலாம்.
தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையின் 21.09.2015. நாளிட்ட அரசாணை எண் :99 ன் படி முப்பது நாட்களுக்குள் பொது மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அந்தந்த துறைகள் நடவடிக்கை எடுக்கச் உத்தரவிடச் சொல்லி, ரிட் மனு தாக்கல் செய்யலாம்.
பொதுநல வழக்கு :- _ஒரு பார்வை_
சட்டம் பற்றிய விளக்கம் மற்றும் ஆலோசனைகள்
இணைய வழி வழக்கு தாக்கல்
இணைய வழி வழக்கு தாக்கல்
இந்தியாவின் உச்ச நீதிமன்றமும், இணையதள நிர்வாகம் மூலமாகத் தனது சேவைகளை இந்தியக் குடிமகன்களின் வீடுகளுக்கே எடுத்துச் செல்லும் முயற்சியில் இறங்கியுள்ளது. இது சம்மந்தமாக அக்டோபர் 2, 1996ஆம் ஆண்டில் உச்சநீதி மன்றம் இணையதளம் மூலமாக வழக்கைத் தாக்கல் செய்யலாம் என்ற நடைமுறையை அமலுக்குக் கொண்டுவந்தது. வீட்டில் இருந்தபடியே வலைதளம் மூலமாக வழக்கு தாக்கல் செய்ய இது மிகவும் எளிய வழியாகும்.
இணையதளம் வலையகம் மூலமாக வழக்கு தாக்கல் செய்ய எந்த வழக்கறிஞரின் உதவியும் தேவையில்லை. இந்தச் சேவையை சாதாரண குடிமகனிலிருந்து, வழக்கறிஞர் வரை யார்வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தச் சேவையைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் எவரும் உச்ச நீதிமன்றம் வலைவாசலில் நுழைந்து,தனது பெயரை, உபயோகிப்பாளர் என்ற பகுதியின் கீழ் பதிவு செய்து கொண்டு, வழக்கு தாக்கல் செய்யலாம்.
வழிமுறைகள்
- உச்சநீதிமன்றத்தின் இணையகம் மூலம் முதல் முறையாக வழக்குத் தாக்கல் செய்பவர்கள், தங்களது பெயரை உபயோகிப்பாளர் கையொப்பப் பகுதியில் பதிவுசெய்ய வேண்டும்
- இணையகம் மூலமாக வழக்குத் தாக்கல் செய்ய வேண்டுமானால், அவர்அதிகாரப்பூர்வமான வழக்கறிஞராகவோ, அல்லது வழக்குத் தொடரும் நபராகவோ மட்டுமே இருக்க வேண்டும்.
- நீங்கள் பதிவு பெற்ற வழக்கறிஞராக இருந்தால் மட்டுமே, வழக்கறிஞர் என்றவிருப்பத் தேர்வு இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையென்றால் வழக்குத் தொடர்பவரே தனது பெயரை அதற்காண இடத்தில் பதிவு செய்ய வேண்டும்.
- முதல் முறையாகப் பதிவு செய்யும்போது, அவசியமான தகவல்களான,விலாசம், தொடர்பு கொள்ள ஏதுவான விவரங்கள், இணையக மெயில் அடையாளம், போன்றவைகள் பதிவு செய்வது அவசியம்.
- தொழில்முறை வழக்கறிஞர் அவரது சங்கேத எண்ணை (பதிவுபெற்ற வழக்கறிஞராக இருந்தால்) இணையதள நுழைவு சொல்லை குறிப்பிட வேண்டும். தனிநபராக, சொந்தப் பொறுப்பில் வழக்குத் தாக்கல் செய்பவர் அவரது நுழைவு சொல்லை புதிதாக உருவாக்கி நுழைவுக் கட்டத்தில் குறிப்பிட வேண்டும். இதையடுத்து, தேவையான விவரங்கள் பதிவுசெய்யப்பட்டவுடன், நுழைவு சொல் மற்றும் ரகசியகச் சொல் சேர்க்கப்படும்.
- இவ்வாறாக வெற்றிகரமாக இணையதளத்தில் நுழைந்தவுடன்,பொறுப்பாகாமை அறிவிப்பு, கணினித் திரையில் தோன்றும்
- "இந்த அறிவிப்பின் விவரத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்" என்ற குறியீட்டை தேர்வு செய்தவுடன், அடுத்த நிலைக்கு செல்லலாம். "இதற்கு நான் ஒப்பவில்லை" என்ற பதிலைத் தேர்வு செய்யும் பட்சத்தில், மறுபடியும் நுழைவு பக்கத்திற்கு சென்று விடும்.
- அடுத்த கட்டமாக, உபயோகிப்பாளர், தனது வழக்கின் விவரங்களைக் கணினியில் பதிவுசெய்து, வழக்கு தாக்கல் செய்யலாம்.
- 'புதிய வழக்கு’ என்ற விருப்பநிலை குறியீட்டை தேர்வு செய்வதன் மூலம் புதிய வழக்கைத் தாக்கல் செய்ய முடியும்.
- திருத்தம்’ என்றே தேர்வுக் குறியீடு உபயோகித்து, ஏற்கனவே தாக்கல்செய்து முடித்த வழக்கு விவரங்களில் மாறுதல்கள் செய்ய முடியும். அதே சமயத்தில் நீதிமன்றக் கட்டணத்தைக் கட்டுவதை துவங்காதவரை திருத்தங்கள் செய்யலாம்.
- நீதி மன்றக் கட்டணம் கிரெடிட் கார்டு/டெபிட் கார்டு ஆகியவற்றின் மூலமாக மட்டுமே செலுத்த முடியும்
- கணினி மூலமாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விவரங்களில் தவறுகள் இருப்பின், உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகம், சம்பந்தப்பட்ட வழக்கறிஞருக்கோ அல்லது வழக்கைப் பதிவு செய்த தனி நபருக்கோஅவைகளைச் சுட்டிக்காட்டி இ-மெயில் மூலம் அனுப்பப்படும்.
- மேலும் உதவி தேவைப்பட்டால் ‘உதவி’ என்கிற விருப்பத் தேர்வுக் குறியீட்டைப் பயன்படுத்தலாம்.
மேலும் விவரங்களுக்கு -இந்திய நீதிமன்றங்கள்
Source : https://ta.vikaspedia.in/e-governance/baaba4bc1baeb95bcdb95bb3bc1b95bcdb95bbeba9-b87ba3bc8bafba4bb3-b9abc7bb5bc8b95bb3bcd/baabafba9bcdbaebbfb95bc1-b87ba3bc8bafbb5bb4bbfb9abcd-b9abc7bb5bc8b95bb3bcd/b89b9abcdb9a-ba8bc0ba4bbfbaeba9bcdbb1ba4bcdba4bbfbb2bcd-b87ba3bc8baf-bb5bb4bbf-bb5bb4b95bcdb95bc1-ba4bbeb95bcdb95bb2bcd