அண்டை மாநிலமான கர்நாடகாவில் கிட்டத்தட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லிங்காயத் மடங்கள் உள்ளன. வாக்கு வங்கியில் இவர்கள் கிட்டத்தட்ட 17 சதவீதம் உள்ளனர்.
இதற்கிடையில், லிங்காயத் மடங்களின் முக்கிய மடாதிபதியான சிவமூர்த்தி முருகா சாரணாரு மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பின்னால் அதிகாரப் போட்டி இருப்பதாக மடத்தினர் கூறுகின்றனர்.
மத்திய கர்நாடகாவில் உள்ள சித்ரதுர்காவில் மடத்தின் சார்பில் நடத்தப்படும் விடுதியில் உள்ள இரண்டு பேர், மடாதிபதி சிவமூர்த்தி மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். புகாரின் பேரில் போலீசார் மடாதிபதி சிவமூர்த்தியிடம் விசாரணை நடத்தினர்.
போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், 15 ஆண்டுகால சதி தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது என மடாதிபதி சிவமூர்த்தி கூறினார். எனினும் தாம் இந்திய திருநாட்டின் சட்டத் திட்டங்களுக்கு கட்டுப்படுவதாக கூறினார்.
மடாதிபதி சிவமூர்த்தி சார்ந்திருக்கும் மடம், இந்துக்களின் பழைமையான நம்பிக்கையை காட்டிலும், சமூக சீர்திருத்தவாதி பசவண்ணரின் கொள்கையின்பால் பிடிப்பு கொண்டது. மாநிலத்தில் லிங்காயத்துக்கள் பரவி வாழ்கின்றனர்.
இதனால் லிங்காயத்து மடங்கள் அரசியல் ரீதியாக பலம் பெற்று விளங்குகின்றன. அண்மையில் ராகுல் காந்தி இந்த மடத்துக்கு வந்திருந்தார். மேலும், மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மற்றும் முன்னாள் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா ஆகியோர் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர்கள். இதில் எடியூரப்பாவுக்கு மடாதிபதி சிவமூர்த்தி நெருக்கம் என்றும் சொல்லப்படுகிறது.
மேலும், சிவமூர்த்தி மடாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு முருக ராஜேந்திர மடம் பெரும் வளர்ச்சி கண்டது. செல்வங்கள் குவிந்தன. இதனால், பக்தர்கள் மடத்தை நவ கோடி நாராயண மடம் என்றே அழைத்தனர்.
முருக ராஜேந்திர மடத்தின் சிவமூர்த்தி மடாதிபதியாக சிவமூர்த்தி வருவதற்கு முன்பு மடத்தில் அவர் மாணவராக இருந்தார். அக்காலக்கட்டத்தில் மதசார்பற்ற ஜனதா தளத்தின் எம்எல்ஏ பசவராஜன், மடத்தின் நிர்வாகியாக செயல்பட்டார். அப்போது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.
இந்தக் குற்றச்சாட்டுகள் வெளிவந்ததில் சிவமூர்த்தியின் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் பதில் குற்றச்சாட்டு ஒன்றும் விடுதி காப்பாளரால் கூறப்பட்டது.
லிங்காயத் அரசியலில் முருக ராஜேந்திர மடம் முக்கிய பங்காற்றுகிறது. 2013-18 காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தபோது இவர் லிங்காயத் தனி மத கோரிக்கையை வெளிப்படையாக ஆதரித்தார். இவர் ஓபிசி சமூகத்தை சேர்ந்தவர் ஆவார்.
இந்த மடத்துக்கு பாஜக, குறிப்பாக பி.எஸ். எடியூரப்பா வெளிப்படையான ஆதரவு அளித்தார். இந்த நிலையில் தற்போது காங்கிரஸூம் ஆதரவு கரம் நீட்டிவருகிறது. ராகுல் காந்தியின் வருகைக்கு பின்னர், மாநில காங்கிரஸ் தலைவர்கள் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோரும் ஆதரவு அளித்துவருகின்றனர்.
கடந்த காலங்களில் முன்னாள் பிரதமர்களான இந்திரா மற்றும் ராஜிவ் காந்தி ஆகியோர் மடத்துக்கு வருகை புரிந்துள்ளனர். இதனால் மடாதிபதி மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்த நிலையிலும் ஆளுங்கட்சி முதல் எதிர்க்கட்சிகள் வரை எச்சரிக்கையாக பதில் அளித்துவருகின்றன.
மடாதிபதியிடம் போலீஸ் விசாரணை நடத்துவதற்கு முன்பே பதிலளித்த எடியூரப்பா, “இந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. அவர் ஒரு உன்னத மனிதர். விசாரணை முடிந்ததும் சுத்தமாக வெளிவருவார்” என்றார். முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, “வழக்கில் விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக பதில் அளிப்பது பொருத்தமாக இருக்காது” என்றார்.
மாநிலங்களவை பாஜக எம்பி லகார் சிங் விடுத்துள்ள அறிக்கையில், “அவர் மீதான குற்றச்சாட்டுகள் பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்பட்டுவரகிறது. இதை உறுதி செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நீதி நிலைநாட்டப்படும். வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வந்தாலும் பரிசீலக்க வலியுறுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/india/shivamurthy-muruga-sharanaru-seer-of-prominent-lingayat-mutt-facing-charges-at-heart-of-obc-faith-debate-in-community-502179/