சென்னையின் மக்கள் தொகை பெருக்கத்தை குறைக்க ஆளும் திமுக அரசு 5 சாட்டிலைட் நகரங்கள் மேம்படுத்தப்படுத்த திட்டம் கொண்டுவரப்படும் என அறிவித்தது. சென்னையின் சாட்டிலைட் நகரங்கள் அமைக்கப்படும் என அறிவித்தது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) இதற்கான பணிகளை தொடங்கியது.
அந்தவகையில் சென்னையின் 2 சாட்டிலைட் நகரங்களை மேம்படுத்த செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டது. செங்கல்பட்டில் 48 கிராமங்களும், காஞ்சிபுரத்தில் 17 கிராமங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த 65 கிராமங்கள் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. இதற்கான விரிவான திட்டப் பணிகளை
தயாரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. சாட்டிலைட் நகரத்தை மேம்படுத்துவதற்கான சமூக மற்றும் பொருளாதார உள்கட்டமைப்புகள் இருப்பதாக அறியப்பட்டது. சென்னை பெருநகரத்தின் பரப்பளவை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்ற திட்டத்தின் ஒருபகுதியாக இது பார்க்கப்படுகிறது. சென்னை பெருநகர எல்லையின் விரிவாக்கம் முன்மொழியப்பட்டதை அடுத்து, மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு இது உதவும்.
செங்கல்பட்டில் மேற்கொள்ளப்படும் திட்டம் செங்கல்பட்டு நகர மைய பகுதியைச் சுற்றியுள்ள 48 கிராமங்களை உள்ளடக்கியதாக உள்ளது. மேற்கில் பாலாறு, வடக்கில் ஜிஎஸ்டி சாலை மற்றும் மஹிந்திரா சிட்டி, கிழக்கில் மலைகள், தெற்கில் புதிய நிர்வாக தலைமையகம் என வளர்ச்சிக்கு உள்பட பகுதிகளாக உள்ளன. தொழிற்பகுதிகளாக உள்ளன.
‘கோயில்களின் நகரம்’ என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில், திட்டமிட்ட வளர்ச்சியை உறுதி செய்வதற்காக, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நகராட்சி பகுதி மற்றும் 17 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டமும் வளர்ச்சியடைந்து வருகிறது. பெரு நிறுவனங்கள், போக்குவரத்து வசதி என பல்வேறு வகைகளில் வளர்ச்சியடைந்து வருகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள புராதான சின்னங்கள் அதை சுற்றியுள்ள இடம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சிஎம்டிஏ விரிவான வளர்ச்சித் திட்டத்தைத் தயாரித்து வருவதாகத் தெரிகிறது.
திருமழிசை, மீஞ்சூர் மற்றும் திருவள்ளூர் ஆகியவை அடுத்த 3 சாட்டிலைட் நகரங்களாகும். திருமழிசை திட்டத்திற்காக ரூ.1,000 கோடி நிதியுதவி மத்திய அரசிடமிருந்து (2021-22 முதல் 2025-26 வரை) நிதியாண்டில் பெற 15வது நிதி ஆணையத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/65-villages-to-be-part-of-two-satellite-towns-of-chennai-498083/