போதுமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய அறிவியல் பூர்வமான இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என திமுக எம்பி பி வில்சன் தெரிவித்துள்ளார்.
“இப்போது ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு 1931-இல் மேற்கொள்ளப்பட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்ளது. இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் ஓ.பி.சி பிரிவு மக்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது” என்று திமுக எம்.பி பி. வில்சன் கூறினார்.
திமுக ராஜ்யசபா எம்.பி. பி.வில்சன், கடந்த வாரம், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை, யூனியன் பட்டியலில் இருந்து, பொதுப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவர் ஈஷா ராயிடம் பேசியதாவது:
சாதிவாரி கணக்கெடுப்பில் உள்ள பிரச்னை என்ன?
தற்போது 1931 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு உள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் ஓ.பி.சி பிரிவு மக்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மண்டல் கமிஷன் அறிக்கைகூட இதை அடிப்படையாகக் கொண்டதுதான். மத்திய அரசு 2011 மற்றும் 2015 க்கு இடையில் மற்றொரு சாதி ரீதியான மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொண்டது. ஆனால், அதன் அறிக்கை பரனில் போட்டு வைக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டில், மத்திய அரசு அதை நிதி ஆயோக்கிற்கு பரிந்துரைத்தது. ஆனால் அதன்பிறகு எந்த நடவடிக்கையும் இல்லை.
சாதியைப் பொறுத்தவரை மாநிலங்களுக்கு இப்போது என்ன அதிகாரங்கள் உள்ளது?
சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினரை நாம் அறிவிக்கலாம். உள் இடஒதுக்கீட்டையும் நாம் அறிவிக்கலாம் – உதாரணமாக தமிழ்நாடு 69% இடஒதுக்கீடு அளிக்கிறது… ஆனால், இவ்வளவு அதிக இடஒதுக்கீடு வழங்கினாலும், அது மக்களின் என்ணிக்கை அடிப்படையில் இல்லை என்பதுதான் உண்மை.
சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள மாநிலங்களுக்கு ஏன் அதிகாரம் தேவை?
நாம் இடஒதுக்கீடு வழங்கும் போது, போதுமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய அறிவியல் பூர்வமாக இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். இரண்டாவதாக, உறுதியான தரவுகள் இல்லை என்று நீதிமன்றங்கள் பொதுவாக மாநிலங்களின் இட ஒதுக்கீட்டை நிறுத்துகின்றன. அந்த உறுதியான தரவு என்ன என்றால் அது ஒரு கணக்கெடுப்பு.
தற்போதைய இட ஒதுக்கீடு முறை வெற்றி பெற்றுள்ளதா?
தற்போது போதிய இடஒதுக்கீடு இல்லாத நிலையில், சாதி ரீதியான மக்கள் தொகைக்கு இணையாக, இடஒதுக்கீடு இடங்கள் காலியாக உள்ளதால், பெரும்பான்மையான சமூகங்களின் வாய்ப்புகள் மற்றும் வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது.
அதற்கு மாநிலங்களுக்கு என்ன வழி இருக்கிறது?
நீதிமன்றங்களை நாட வேண்டும்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-mp-p-wilson-says-reservation-should-be-provided-scientifically-to-ensure-adequate-representation-488501/