8 வழிச்சாலை தொடர்பான பணிகளை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின், செங்கல்பட்டு, தர்மபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்ட ஆட்சியர்களுடனும், பாதிக்கப்பட்ட மக்களுடனும் ஆலோசனை செய்து முடிவுக்கு வருவார் என்று கூறப்படுகிறது.
மக்களவையில், திமுக எம்பி ராமலிங்கம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், தமிழக அரசின் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். சென்னை சேலம் 8 வழிச்சாலை திட்டமானது ரூ 7,230 கோடியில் நடைபெற உள்ளது. இந்த திட்டம் தொடர்பான தமிழக அரசின் மறுசீரமைப்பு முடிவுகளுக்காக மத்திய அரசு காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ வேலு கூறுகையில் “சாலைகள் அமைக்கு திட்டத்திற்கு தமிழக அரசு எதிராக இல்லை. இதுபோன்ற திட்டங்கள் நமது பொருளாதாரத்தை மேம்படுத்தும். 8 வழிச்சாலை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மக்களிடம் கருத்து கேட்ட பின்னர் இது தொடர்பாக முதலவர் முடிவெடுப்பார் என்று அவர் கூறினார்.
இது தொடர்பாக முக்கிய அதிகாரி கூறுகையில் “ தேசிய நெஞ்சாலை ஆணையம் மாற்றங்களுக்கு தயாராக இருக்கிறது. திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று அரசு நினைத்தால் நாங்கள் அதற்கு தயாராக இருக்கிறோம். மேலும் இது தொடர்பான முடிவு மாநில அரசிடம்தான் இருக்கிறது” என்று கூறினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/8-way-track-salem-tn-govt-to-take-decisions-491698/