சனி, 8 ஜூலை, 2023

திரிபுரா சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ ஆபாச படம் பார்த்ததாக புகார்! அமளியில் ஈடுபட்ட 5 எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்!

 

ஆபாச படம் பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக திரிபுரா சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட 5 எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்

திரிபுரா மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது ஆளும் பா.ஜ.க. அரசின் எம்.எல்.ஏ. ஜபாத் லால் நாத், செல்போனில் ஆபாசப் படம் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இன்று திரிபுரா சட்டசபையில் கூட்டம் நடைபெற்றது.

அப்போது இந்த விவகாரம் தொடர்பாக பாஜக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த சபாநாயகர், பல்வேறு முக்கிய பிரச்சனைகள் இருப்பதால் அனைவரும் இருக்கையில் சென்று அமரும்படி கூறினார்.

இதையடுத்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள், மேஜை மீது ஏறி நடந்தும், மனித சங்கிலி அமைத்தும், கோஷங்களை எழுப்பியும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது திப்ரா மோத்தா மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் இடையே சலசலப்பு மற்றும் மோதல் ஏற்படும் சூழலும் ஏற்பட்டது.

இதையடுத்து அமளியில் ஈடுபட்டதாக கூறி எதிர்கட்சி எம்எல்ஏக்கள் 5 பேரை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். சபாநாயகரின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சியினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.


source https://news7tamil.live/complaint-that-bjp-mla-watched-obscene-film-in-tripura-assembly-5-mlas-involved-in-amali-suspended.html