மாட்டிறைச்சிக்காக 200 க்கும் மேற்பட்ட இந்துத்துவா பயங்கரவாதிகள் முஹம்மது அக்லாக்கை படுகொலை செய்ததை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின் போது முஹம்மது அக்லாக் படுகொலை தொடர்பாக பிரதமர் மோடி வாயே திறக்கவில்லை என்று விமர்சனம் செய்தனர்.
அதனால் அவர்களை கைது செய்ய வேண்டும் பாஜக தேசிய செயலாளர் H.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியின் போது இதே பாஜகவினர் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை மண்ணு மோகன் என்றும், ஊமை என்றும், ரோபோ என்றும், Silent Mode என்றும் மற்றும் இதைவிட மிக கேவலமாக சோனியா காந்தியை இணைத்து மிக கேவலமாக விமர்சித்தனர்.
மன்மோகன் சிங்கை பாஜகவினர் விமர்சித்ததை விட மோடியை முஸ்லிம் தலைவர்கள் தரக்குறைவாக விமர்சித்து விடவில்லை,
ராமனை ஏற்காதவர்கள் முறையாக பிறக்கவில்லை என்று சொன்ன பாஜக அமைச்சரை கைது செய்ய சொல்லாத H.ராஜா தவ்ஹீத் ஜமாஅத் தலைவர்களை கைது செய்ய சொல்கிறார்.
உலகிலேயே நம்பர் 1 முட்டாள் பிரதமர் மோடி என்றும், முதல் 10 தீவிரவாதிகளில் மோடியும் ஒருவர் என்றும் விமர்சித்த வெளிநாட்டு நிறுவனங்களை முதலில் கைது செய்ய வேண்டியது தானே ?
நாடு முழுவதும் மதவெறியோடு ஆட்சி செய்து கொண்டிருக்கும் மோடியை விமர்சிப்பது என்ன மோடிக்கு எதிராக புரட்சியே வெடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை,
முஸ்லிம் தலைவர்கள் விமர்சித்தது போல் நாகரீகமாக அல்லாமல் மோடியை மரண வியாபாரி என்றும், இரத்தக்காட்டேரி என்றும் விமர்சித்தாலும் அதற்கு முழு தகுதியும் அவரிடம் இருக்கிறது.