தனிக் கட்சித் தொடங்கி அரசியலில் களம் இறங்குவது உறுதி, என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை கேளம்பாக்கத்தில் நடைபெற்ற, நற்பணி இயக்க விழாவில் கலந்துகொண்டு பேசியபோது, அவர் இவ்வாறு தெரிவித்தார். தனது பிறந்தநாளான வரும் 7-ம் தேதி, கேக் வெட்டப் போவதில்லை என்றும், அதற்கு பதிலாக கால்வாய் வெட்டப் போகிறேன், என்றும் கமல்ஹாசன் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
பணக்காரர்கள் சரியாக வரி செலுத்தினாலே நாடு முன்னேறும், என்று கூறிய அவர், நல்லதை செய்ய முடியாத சூழலில்தான் அரசியலுக்கு வந்தேன் என்றும் தெரிவித்தார். திருடர்கள் எல்லாம் பெரியவர்களாக இருக்கிறார்கள் என்று குறிப்பிட்ட கமல்ஹாசன், கட்சி துவங்குவதற்கான முதல் பணி தான், நவம்பர் 7-ம் தேதி மொபைல் ஆப் அறிமுகம், என்றும் கூறினார். மேலும், இத்தனை நாள் பயந்து ஒளிந்திருந்தேன்; இனி அப்படி இருக்க மாட்டேன் என்றும், தனது அரசியல் பிரவேசம் பற்றி கமல்ஹாசன் குறிப்பிட்டார்.
உண்மை பேசுபவர்களை சிறையில் தள்ளினால், தற்போது உள்ள சிறைகளின் எண்ணிக்கை போதாது, என்றும் கமல்ஹாசன் தனது பேச்சில் குறிப்பிட்டார். மேலும், அளவு தெரியாமல் கொடுத்து விடக் கூடாது என்பதற்காகவே, நிலவேம்பு கஷாயம் குறித்து, ரசிகர்களை எச்சரித்ததாகவும், கமல்ஹாசன் விளக்கம் தெரிவித்தார். மேலும், ஊழல் செய்வதற்காக தான் அரசியலுக்கு வரவில்லை என்றும், சுவிஸ் வங்கியில் கருப்புப் பணத்தை பதுக்க மாட்டேன் என்றும் நடிகர் கமல்ஹாசன் தனது பேச்சின்போது தெரிவித்தார்.