புதன், 8 நவம்பர், 2017

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு.! November 8, 2017

Image

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது வரும் நாட்களில் நகர்ந்து தமிழகம் வர வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. மேலும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.