புதன், 8 நவம்பர், 2017

பணம் பதுக்கியோர் பட்டியலை வெளியிட பயப்படுவது ஏன்? - ப.சிதம்பரம் November 8, 2017

Image


பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் உறுதியாக இருந்தால், கறுப்புப் பணம் பதுக்கியோர் பட்டியலை வெளியிட பயப்படுவது ஏன்? என்று மத்திய அரசுக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் உயிர்கள் பலியானதையும், வேலைவாய்ப்புகள் பறிபோனதையும் யாராவது மறுக்க முடியுமா? எனக் கேட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் நடவடிக்கையால் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாக BBC செய்தி வெளியிட்டதை சுட்டிக் காட்டியிருக்கும் சிதம்பரம், இதனை வைத்து BBC நிறுவனம் ஊழல் மற்றும் கறுப்புப் பணத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது எனக் கூற முடியுமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கறுப்புப் பணத்தை மத்திய அரசு ஒழித்து விட்டதாக கூறினாலும், குஜராத் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது கறுப்புப் பணம் எங்கே இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம் என்றும் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.