வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்கள், நாளைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால், துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.
கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார். இந்நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துத் தொழிலாளர்கள், போராட்டத்தை கைவிட்டு நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டுமென, போக்குவரத்துத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இல்லையென்றால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளதுடன், பணிக்கு வராதவர்கள் உரிய விளக்கத்தை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போராட்டத்திற்கு உயர்நீதிமன்றத்தில் இருந்து தடை, ஊழியர்களுக்கு நோட்டீஸ் என அழுத்தம் அதிகரித்துவரும் நிலையில் ஊதிய உயர்வு பிரச்னையை தீர்க்காத வரை, வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும், என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. சென்னையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து, 17 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கூடி ஆலோசனை செய்தன. இதையடுத்து, செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை மறுநாள் தமிழகம் முழுவதும், ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தனர்.