ஞாயிறு, 7 ஜனவரி, 2018

சட்டவிரோதமாக ஜோராக நடக்கும் போதைப்பொருள் வியாபாரம்! January 6, 2018

Image

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் ,பொன்னேரி, கும்மிடிபூண்டி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக தமிழக அரசினால் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களான பான் குட்கா, ஆன்ஸ் உள்ளிட்ட புகையிலைப்பொருட்கள், பெட்டிகடைகளிலும் தேநீர் கடைகளிலும் ,மளிகை கடைகளிலும் , பேருந்து நிலையங்களை ஒட்டியும் ,பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகாமையில் சர்வ சதாரணமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆந்திரா, கர்நாடகா போன்ற மற்ற வெளிமாநிலங்கள் வழியாக  வாகனங்களில் கொண்டு வந்து தலைநகரான சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும் போது திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினர் வாகன தணிக்கை நடத்தி பல லட்ச ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்து,கைது நடவடிக்கை எடுத்தாலும், குடோன்களில் பதுக்கி சட்ட விரோதமாக  விற்பனை செய்வதும் தொடர்கதையாகிவருகிறது.

இளையதலைமுறையினர் போதைக்கு அடிமையாகி சீரழிய காரணமாக உள்ள தடைசெய்யப்பட்ட போதைபொருட்களின் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்  என்றும், பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையங்கங்ள்  மற்றும் மக்கள் கூடும் இடங்களில் உள்ள கடைகளில், இங்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதில்லை என்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகள் பெயரளவிற்கு மட்டுமே தொங்கவிடுவதும் ,ஆனால் விற்பனை படு ஜோராக நடைபெற்று வருவதாகவும், இதனை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை  என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.