பட்ஜெட் உரையில் வெளியான சில முக்கிய அறிவிப்புகள்:
➤மொத்தம் 2000 மின்சார பேருந்துகள் வாங்கப்படும்; சென்னை, கோவை, மதுரையில் முதற்கட்டமாக 500 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்.
➤காவல்துறையில் காலியாக உள்ள 9,975 காலிப்பணியிடங்கள் நிரப்ப தேர்வு நடத்தப்படும்.
➤வரும் ஆண்டில் 80 ஆழ்கடல் மீன்பிடி படகுக்களுக்கு 240 தகவல் பெறும் கருவிகள் , 160 ஐசாட்-2 செயற்கைக்கோள் தொலைபேசிகள் மற்றும் 160 நேவ்டெக்ஸ் கருவிகளையும் அரசு வழங்கும்.
➤தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் நடத்தப்பட்டு வந்த 7,896 சில்லறை மதுபானக்கடைகள், 5,198 ஆக குறைக்கப்பட்டுள்ளன.
➤2019-2020ல் மாற்றுத்திறனாளிகளுக்கு 3,000 சிறப்பு நாற்காலிகளும், 3,000 பெட்ரோலிய ஸ்கூட்டர்களும் வழங்கப்படும்.
➤2012 - 2013 ஆம் ஆண்டில் 5.37% ஆக இருந்த மாநில மொத்த உற்பத்தி மதிப்பின் வளர்ச்சி விகிதம் 2018- 2019 ஆம் ஆண்டில் 8.16% உயர்ந்துள்ளது.
➤நடப்பு நிதியாண்டில், ரூ.10,000 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
➤வேலைவாய்ப்பற்ற பொறியியல் பட்டதாரிகளுக்கு உயர்நிலை தொழில்நுட்ப திறன் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
➤ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு நடப்பாண்டில் கூடுதலாக 20 விடுதி கட்டடங்கள் கட்டப்படும்.
➤உயர்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி உதவித் தொகைக்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
➤பள்ளி மாணவ, மாணவியர்களின் பயண கட்டண சலுகைக்காக ரூ.766 கோடி ஒதுக்கீடு.
source: ns7.tv