வியாழன், 7 பிப்ரவரி, 2019

சீன மொபைல் App-களுக்கு கடிவாளம் போடும் இந்தியா! February 06, 2019

Image
அமேசான், வால்மார்ட், ஃபேஸ்புக் போன்ற அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் தற்போது மத்திய அரசின் பார்வை சீன மொபைல் ஆப்கள் பக்கம் பாய்ந்துள்ளது.
UGC எனப்படும் பயனாளிகளால் உருவாக்கப்பட்ட தரவுகளை கொண்டு இயங்கும் சீன மொபைல் ஆப்களான Tiktok, Vigo, LIKE மற்றும் Helo போன்றவை மிகக் குறைந்த கால அளவிலேயே மக்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளன. இவை மிகவும் ஆபத்தாக மாறிவருவதை உணர்ந்து அவை மீதான ஒழுங்குமுறையை வரையறுக்க தற்போது மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதன்படி 50 லட்சத்திற்கும் அதிக பயனாளர்களை கொண்டுள்ள சீன ஆப் நிறுவனங்கள், இந்தியாவில் அலுவலகம் அமைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனம் சார்பில் பணியமர்த்தப்படும் மூத்த நிர்வாகியே இனி இந்திய செயல்பாடுகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வரையறுத்துள்ளது.
இது தொடர்பாக தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மூத்த அதிகாரியான கோபாலகிருஷ்ணன் கூறும்போது, இது போன்ற ஆப்களில் உருவாக்கப்படும் வீடியோ போன்ற தகவல்களுக்கு யார் பொறுப்பு என்பதே கவலைகொள்ளச் செய்வதாக தெரிவித்தார். மேலும் இது போன்ற ஆப் தகவல்களால் தவறான செய்திகள், ஆபாசம், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுருத்தல் போன்ற சட்டவிரோத செயல்களுக்கு இடமளிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
Tiktok ஆப்பினை இந்தியாவில் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மட்டும் மாதம் ஒன்றிற்கு 15 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் Tiktok ஆப்பின் மோசமான பயன்பாட்டின் காரணமாக இந்தோனேசியாவில் அது தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
source : ns7.tv