வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

2019-20 தமிழக பட்ஜெட்: அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய திட்டங்கள்! February 08, 2019

Image
2019-20ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சில முக்கிய திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
முக்கிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு:
பெருங்குடி, கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க ரூ.5,259 கோடி ஒதுக்கீடு.
அண்ணா பல்கலையில் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள 100 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்.
ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பெயரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படும்.
முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய 2019-20 ஆம் ஆண்டில் 20,000 வீடுகள் கட்டித்தரப்படும். 
அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் நலனுக்காக ரூ.55,399 கோடி, ஓய்வூதிய பலன்களுக்காக ரூ.29,627 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ. 2,681 கோடி ஒதுக்கீடு. 
உலக வங்கி கடன் உதவியுடன் ரூ.2,685 கோடியில் தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் செயல்படுத்தப்படும். 
சமூக பாதுகாப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்காக ரூ.3,958 கோடி ஒதுக்கீடு. 
வறுமை ஒழிப்புத்திட்டங்களுக்கு ரூ.1,031 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், ரூ.2791 கோடியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம் செயல்படுத்தப்படும். 
2019-20 ஆம் ஆண்டில் மடிக்கணினி வழங்குவதற்காக 1362 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேனி, சேலம், ஈரோடு மாவட்டங்களுக்கு 250 மெகா வாட் திறன் கொண்ட மிதக்கும் சூரியசக்தி திட்டங்கள் அறிவிப்பு. 
தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகளை புனரமைக்கும் பணிக்களுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.
ஆயுள் காப்பீடு திட்டத்தின் மூலம் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும்.
காய்கறி, பழங்கள் சாகுபடியை ஊக்குவிக்க முதல்வரின் சிறப்பு திட்டம் நடப்பாண்டில் செயல்படுத்தப்படும்.
வேளாண் இயந்திர மயமாக்கலுக்காக ரூ.172 கோடி நிதி ஒதுக்கீடு. வேளாண் கல்லூரிகள் தோட்டக்கலை கல்லூரிகளுக்கு 79 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
க.பரமத்தி ஒன்றியம், அரவக்குறிச்சியில் ரூ.1,558 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்திற்காக ரூ.198 கோடி ஓதுக்கீடு.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நல திட்டத்திற்கு ரூ.951 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள குடிமராமத்து திட்டத்திற்காக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஏழைகளுக்கு மருத்துவ வசதி எளிதில் கிடைக்க ரூ.2685 கோடியில் சுகாதார சீரமைப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.  
அம்மா இருசக்கர வாகன திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.250 கோடி ஒதுக்கீடு. 
மாணவ, மாணவியர் பயண கட்டண சலுகைக்காக ரூ.766 கோடி ஒதுக்கீடு. 
சத்துணவு திட்டத்திற்காக ரூ.1772 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு திருமணா நிதியுதவி திட்டங்களுக்கு ரூ.726 கோடி ரூபாய் ஒதுக்கீடு. 
எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்திற்கு ரூ. 1,772 கோடி ஒதுக்கீடு.  
பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் 3ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான பெண் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கு ரூ.48.70 கோடி ஒதுக்கீடு. 
வறுமை ஒழிப்பு திட்டத்திற்காக ரூ.1,031 கோடி ஒதுக்கீடு.

source : ns7.tv