சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தயாரிக்கப்பட்ட ஹாண்ட் வாஷை (கை சுத்திகரிப்பானை) அமைச்சர் விஜயபாஸ்கர் அறிமுகப்படுத்தினார்.
யோகா மற்றும் தியானக் கூடத்தையும் கல்லீரல் மற்றும் பித்தவியல் நிலையத்தில் அதி நவீன கதிரியல் மையத்தையும் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், கல்லீரல் புற்றுநோயை தொடக்க நிலையில் கண்டறிந்தால் குணப்படுத்தும் வசதி உள்ளதாக கூறினார். மேலும், இதற்கான கருவி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிறகு ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கு யோகா பயிற்சி வழங்கப்படும் என்றும் மார்ச் 10ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்
இந்தியாவில் 4 ஆண்டுகளுக்கு முன்பும் தமிழகத்தில் 14 ஆண்டுகளுக்கு முன்பும் போலியோ ஒழிக்கப்பட்டுவிட்டது என்று கூறினார்.
source: ns7.tv