இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி உடுமலை கவுசல்யாவை பணி இடைநீக்கம் செய்து வெலிங்டன் கன்டோன்மெண்ட் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஆணவக் கொலையால் பாதிக்கப்பட்ட கவுசல்யா அதன்பின்னர் ஆணவக்கொலைகளுக்கு எதிராக குரல் கொடுத்து சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தார். பின்னர் கவுசல்யாவுக்கு குன்னூர் வெலிங்டன் கன்டோன்மெண்டில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டது. கோவை வெள்ளலூரை சேர்ந்த பறை இசை கலைஞர் சக்தி என்ற வாலிபரை கவுசல்யா மறுமணம் செய்து கொண்ட சில மணி நேரத்திலேயே சக்தி மீது சமூக வலைதளங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. அது பின்னர் சர்ச்சையாகவும் மாறியது.
இந்நிலையில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த கவுசல்யா இந்திய இறையாண்மைக்காக எதிராக பேசியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கவுசல்யாவை பணிஇடைநீக்கம் செய்து கன்டோன்மென்ட் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
source ns7.tv