மகாத்மா காந்தி நினைவு நாளில், அவரது உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு அவமதித்த, இந்து மஹா சபா பெண் நிர்வாகி பூஜா பாண்டே கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாத்மா காந்தி நினைவு நாளில், அவரது உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு அவமதித்த, இந்து மஹா சபா பெண் நிர்வாகி பூஜா பாண்டே கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 30ம் தேதி நாடு முழுவதும் காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது, உத்தரப்பிரதேச மாநிலம் அலிகரில் கூடிய, பூஜா ஷகுன் பாண்டே தலைமையிலான இந்து மஹா சபா நிர்வாகிகள் சிலர், காந்தியின் உருவ பொம்மையை அவமதித்தனர். மேலும், காந்தி உருவ பொம்மையை, இந்து மஹா சபா நிர்வாகி பூஜா பாண்டே, துப்பாக்கியால் சுட்டு அவமரியாதை செய்தார்.
மேலும், காந்திக்கு எதிராக குரல் எழுப்பிய அந்த கும்பல், அவரை சுட்டுக் கொன்ற கோட்சேவை ஆதரித்து கோஷமிட்டது. இந்த வீடியோ வெளியாக நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், காந்தி உருவ பொம்மையை அவமரியாதை செய்தவர்களை கைது செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான பூஜா பாண்டேவே தேடி வந்தனர். இந்நிலையில், சம்பவம் நடந்து 6 நாட்களுக்குப் பிறகு, பூஜாவையும், அவரது கணவரையும் கைது செய்துள்ளனர்.
source Ns7.tv
http://ns7.tv/ta/tamil-news/india/6/2/2019/pooja-pandey-hindu-mahasabha-arrested-mahatma-gandhi