இரண்டு பிள்ளைகளுக்கு மேல் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிடவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகைளை வலியுறுத்தி பா.ஜ.கவைச் சேர்ந்த அஸ்வினி உபாத்யாயா உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் அஸ்வினி உபாத்யாயா தாக்கல் செய்துள்ள மனுவில்,
- அனைத்து மாநிலங்களும் ஒரு தம்பதிக்கு இரு குழந்தைகள் என்பதை நடைமுறைபடுத்த உத்தரவிட வேண்டும்.
- இரு பிள்ளைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசு வேலை வழங்கக்கூடாது; இதை கட்டாயமாக்க வேண்டும்.
- இரு பிள்ளைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசு சலுகைகளை வழங்கக்கூடாது.
- அதிக பிள்ளை பெற்றுக்கொள்பவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கக்கூடாது; தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும்; இலவச சட்ட உதவி வழங்கக்கூடாது, சொத்துரிமை வழங்கக்கூடாது.
- திருமண வயது என்பதை 21 என்று ஆக்கவேண்டும்.
ஆகியவற்றை குறிப்பிட்டுள்ள அவர், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், மக்களுக்கு தரமான சேவைகளை வழங்கவும் இந்த விசயங்களை நடைமுறைபடுத்த வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
source; ns7.tv