ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும், ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்கக் கோரி அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் 2017ம் ஆண்டு ஆணையம் அமைக்கப்பட்டது. விசாரணைக்காக அப்போலோ மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், ஆணையத்திற்கு தடை கோரி அப்போலோ நிர்வாகம் மனுதாக்கல் செய்துள்ளது. ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க, தமிழக அரசு சாராத, நிபுணத்துவம் கொண்ட மருத்துவக் குழு அமைக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தீர்வு காணும் வரை, சிகிச்சை தொடர்பான விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சசிகலா எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த மனு வரும் 11ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
source: ns7.tv