திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மறைவை ஒட்டி கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு வார காலம் ஒத்திவைக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறவையொட்டி மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் 43 ஆண்டுகள் திமுக பொதுச் செயலாளராக இருந்த க. அன்பழகன் திமுக ஆட்சியில் சமூக நலம், மக்கள் நல்வாழ்வு, கல்வி மற்றும் நிதி ஆகிய துறைகளின் அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் திகழ்ந்தவர் பேராசிரியர் க. அன்பழகன் என்று தெரிவித்துள்ளார்.

தமிழாய்ந்த பேராசிரியராக விளங்கிய க. அன்பழகன் மறைவை ஒட்டி திமுக நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
மேலும் திமுக கொடிகள் அனைத்தும் 7 நாட்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
credit ns7.tv