செவ்வாய், 7 ஏப்ரல், 2020

சென்னையில் மட்டும் 110 பேர்: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக பாதிப்பு விவரம்

 கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இதுவரை 4281 நபர்கள் கொரோனா பாஸிட்டிவ் எனக் கண்டறியப்பட்டுள்ளனர். மேலும் 111 நபர்கள் கொரோனா தாக்குதலுக்கு பலியாகியிருக்கிறார்கள்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, இதுவரை 621 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் 570 நபர்கள் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள். அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 110 நபர்களுக்கு இந்த வைரஸ் தாக்குதல் இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக, இரண்டாவது இடத்தில் கோவை இருக்கிறது. இங்கு 50 நபர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
மூன்றாவது இடத்தில் திண்டுக்கல் மாவட்டம் உள்ளது. இங்கு 45 பேருக்கும், நான்காவதாக திருநெல்வேலியில் 38 பேருக்கும், ஈரோட்டில் 32 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. இதில் ஈரோடு ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, திருச்சி மாவட்டத்தில் 30 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகையால் இம்மாவட்டம் 6-வது இடத்தில் உள்ளது. ஏழாவது இடத்தில் நாமக்கல், இங்கு 28 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அடுத்ததாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் 25 பேருக்கும், செங்கல்பட்டில் 24 பேருக்கும், கரூர் மற்றும் தேனியில் தலா 23 நபர்களுக்கும், மதுரையில் 19 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
அடுத்ததாக 13-வது இடத்தில் விழுப்புரம் உள்ளது. இங்கு 16 பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டிருக்கிறது. கடலூரில் 13 பேருக்கும், சேலம், திருவள்ளூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தலா 12 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. நாகப்பட்டினம், தூத்துக்குடி, விருதுநகர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் தலா 11 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.  திருவண்ணாமலையில், 9 பேருக்கும், தஞ்சாவூரில் 8 பேருக்கும், திருப்பூரில்  7 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா 6 பேருக்கும், சிவகங்கை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் 5 பேருக்கும், நீலகிரியில் 4 பேருக்கும், கொரோனா தாக்குதல் உறுதியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேருக்கும்,  அரியலூர் மற்றும் பெரம்பலூரில் தலா ஒருவருக்கும் இந்த கொரோனா  வைரஸ் தாக்குதல் உறுதியாகியுள்ளது.
சென்னை நிலவரம்
சென்னையைப் பொறுத்தவரை, 15 மண்டலங்களாக இம்மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக திருவிக நகர் மற்றும் அண்ணாநகர், ஆகிய மண்டலங்களில் 14 பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் 12 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 7 பேருக்கும் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  வளசரவாக்கம், பெருங்குடி ஆகிய மண்டலங்களில் தலா 4 பேருக்கு இந்த கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவொற்றியூர், மாதவரம், அடையார் ஆகிய மண்டலங்களில் தல 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆலந்தூர் மற்றும் சோளிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் தலா 2 பேருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  மணலி மற்றும் அம்பத்தூரில் யாருக்கும் கொரோனா பாதிப்பில்லை.
credit : indianexpress.com