இந்தியாவில் கொரோனாவால் இதுவரை பாலியானவர்களில் 63% பேர் 60 வயதை கடந்தவர்கள் என மத்திய அரசு கூறியுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால், கொரோனா பாதிப்பு தொடர்பான விபரங்களை டெல்லியில் செய்தியாளர்களிடம் விளக்கினார். நாட்டில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளதாக அப்போது அவர் தெரிவித்தார். அவர்களில் 63% பேர் 60 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் என்று கூறிய லாவ் அகர்வால், 30% பேர் 40லிருந்து 60 வயதுக்கு உட்பட்டவர்கள் எனக் கூறிய மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர், 7% பேர் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் எனக் கூறினார்.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 693 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் லாவ் அகர்வால் கூறினார். இந்தியாவில் இதுவரை 4,067 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 76% பேர் ஆண்கள் என்றும் 24% பேர் பெண்கள் என்றும் லாவ் அகர்வால் தெரிவித்தார்.
credit ns7.tv