வியாழன், 16 ஏப்ரல், 2020

தமிழகத்தில் 22 மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட் பகுதிகளாக அறிவிப்பு!


கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள ஹாட் ஸ்பாட் பகுதிகளாக தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.
சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, ஈரோடு, வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, தூத்துக்குடி, கரூர், நெல்லை, கன்னியாகுமரி, கடலூர், திருவள்ளூர், சேலம், நாகை, விருதுநகர் ஆகிய 22 மாவட்டங்கள் கொரோனா தொற்று அதிகம் பாதித்த ஹாட் ஸ்பாட் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று உள்ளவர்கள் 15 பேருக்கு மேல் உள்ள மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட் மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 20ம் தேதி முதல் ஊரடங்கில் சில கட்டுபாடுகளை தளர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் இந்த தளர்வானது ஹாட் ஸ்பாட்டாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு பொருந்தாது என கூறப்பட்டுள்ளது.

credit ns7.tv