சனி, 11 ஏப்ரல், 2020

இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 2100 பேர் பலி: கொரோனா பிடியில் அமெரிக்கா

உலகளவில், 1,00,000 க்கும் மேற்பட்ட மக்கள் இந்த நோயால் இறந்துள்ளனர். இதில் ஐரோப்பாவில் கிட்டத்தட்ட 70 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக...

இந்தியாவில், கடந்த ஒரு நாளில் 896 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று (கோவிட்-19) உறுதி செய்யப்பட்டுள்ளது. 37 கொரோனா வைரஸ் மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் , மூன்றாம் கட்ட நிலை என்று சொல்லப்படும் “சமூக அளவிலான பரவலை” இந்தியா சுகாதார துறை அமைச்சகம் மறுத்துள்ளது.
உலகளவில், 1,00,000 க்கும் மேற்பட்ட மக்கள் இந்த நோயால் இறந்துள்ளனர். இதில் ஐரோப்பாவில் கிட்டத்தட்ட 70 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவல் மையம் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு நாடுகளும் எப்படி பயணிக்கின்றன?  கொரோனா வைரஸ் தொற்று வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு காலங்களில் தொடங்கியதால், ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்க்க ஒரு தொடக்கப்புள்ளி தேவைப்படுகிறது. எனவே, ஒவ்வொரு நாட்டிலும் 50-வது வழக்கு உறுதிசெய்யப்பட்ட நாளை  தொடக்கப் புள்ளியாக எடுத்துக் கொண்டு, நாடுகள் எவ்வாறு பயணிக்கின்றன என்பதை இந்த படத்தில் விளக்கப்பட்டுள்ளது.
உலகளவில் நோய் தொற்றின் மொத்த எண்ணிக்கை 1,696,139 ஆக உயர்ந்துள்ளது.இதில் அமெரிக்காஅதிகபட்சமாக 500,399 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது, ஸ்பெயின் (158,273), இத்தாலி (147,577), பிரான்ஸ் (125,931) மற்றும் ஜெர்மனி (122,171) போன்ற ஐரோப்பிய நாடுகள் அடுத்தடுத்து உள்ளன.

புதிய வழக்குகள்:  அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் புதிய வழக்குகள் அதிகரித்து வருகிறது 
இன்று உலகவில், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகள் தான் வைரஸ் தொற்று புதிய வழக்குகளை பதிவு செய்தி வருகின்றன.

உலகளாவிய மரணங்கள்:  
உலகளவிtல் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட மரணங்கள் 100,000-ஐத் தாண்டியுள்ளது.

உலகில் மிகவும் பாதிப்படைந்த 10 நாடுகளில், 100 கொரோனா வைரஸ் தொற்றுக்கு, ஒரு மரணம் என்ற கணக்கில் பார்த்தால்; அமெரிக்கா, சீனாவை விட இத்தாலி, பிரிட்டன் போன்ற நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் இந்த வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இதுவரையில்,100,661 பேர் இறந்துள்ளனர். ஐரோப்பாவில் மட்டும்  குறைந்தது  70,245 பேர்  இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது . இத்தாலியில் அதிகபட்சமாக 18,849 இறப்புகளை சந்தித்துள்ளது. அதற்கு, அடுத்தபடியாக அமெரிக்காவில் 18,331 பேர் மரணமடைந்துள்ளனர்.
அமெரிக்கா vs இத்தாலி
அமெரிக்கா கடந்த 24 மணி நேரத்தில் 2,100 கொரோனா வைரஸ் இறப்புகளை பதிவு செய்துள்ளது. இதுவரை இது போன்ற தினசரி இறப்பை எந்தவொரு நாட்டிலும், இந்த கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் நிகழ்ந்ததில்லை.
இத்தாலியில், கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் குறைய ஆரம்பித்துள்ளது.

credit indianexpress.com