ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் 20,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Image
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்துக்குச் சென்றுள்ளது.
உலகம் முழுவதும் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால், 17 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது.
அமெரிக்காவில் மின்னல் வேகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால், 5 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 700க்கும் அதிகமானோர் மரணமடைந்தனர். அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது. இதன் மூலம், உலக அளவில் கொரோனாவுக்கு அதிக உயிர்களை பரிகொடுத்த நாடு என்ற பரிதாபமான நிலையை அமெரிக்கா எட்டியுள்ளது.
credit ns7.tv