வியாழன், 16 ஏப்ரல், 2020

புதுச்சேரி மாநிலத்தில் 20ம் தேதிக்கு பிறகு 90 சதவீத தொழிற்சாலைகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் - நாராயணசாமி

Image
புதுச்சேரி மாநிலத்தில் 20ம் தேதிக்கு பிறகு 90 சதவீத தொழிற்சாலைகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி சட்டபேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்கள் மாநிலத்தில் இதுவரை ஆறு நபர்கள் மட்டுமே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் உடல்நிலை நன்றாக தேர்ச்சி பெற்று வருவதாக தெரிவத்தார்.
மாநிலம் முழுவதும் 4ஆயிரத்து 115 பேர் வீட்டில் தனிமைப்படுத்தி கண்காணிப்பட்டு வருவதாக கூறிய அவர்,  20ஆம் தேதிக்கு பிறகு 90% தொழிற்சாலைகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
credit ns7.tv