மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துடன் (சிபிஎஸ்இ) இணைக்கப்பட்ட பள்ளிகள், இந்த கல்வியாண்டு முதல் mu தங்கள் திறனறிவு பாடத்திட்டங்களின் ஒரு பகுதியாக செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), வடிவமைப்பு சிந்தனை (design thinking), உடல் செயல்பாடு பயிற்சியாளர் போன்றவைகளை கற்பிக்க இருக்கிறது. இந்த பாடத்திட்டங்கள் 11 வகுப்பு முதல் கற்பிக்கப்படுகிறது . சிபிஎஸ்இ ஏற்கனவே உயர்நிலைக் கல்வி மட்டத்தில் 17 திறனறிவு பாடங்களையும், மேல்நிலைக் கல்வி அளவில் 37 திறனறிவு பாடங்களையும் வழங்குகிறது.
வேகமாக மாறிவரும் உலகில், தொலைநோக்கு அடிப்படையிலான கல்வி மாணவர்களுக்கு அவசியமாகிறது, பாடத்திட்டத்திற்கும், வெளியுலக அனுபவத்திற்கும் இடையிலான இடைவெளியை நிரப்பப்பட வேண்டும்.
சிபிஎஸ்சி வாரியம் இது குறித்து தெரிவிக்கையில், “அனைத்து வகையான கற்றலையும், திறன்களையும் பிரதானப்படுத்துவதால், மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், துல்லியமான வேலைக்குத் தேவைப்படும் தத்துவார்த்த அறிவு, அணுகுமுறைகள், மனப்பான்மை,மென்மையான திறன்கள் ஆகையவற்றையும் ஒருங்கிணைக்க முடியும் ” என்று கூறியுள்ளது .
சமீபத்தில், சிபிஎஸ்இ 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘அப்ளைடு கணிதத்தை’ அறிமுகப்படுத்தியது. இது அறிவியலுக்கு அப்பால் தேவைப்படும் கணிதத்தின் பயன்பாடுகளை கற்பிக்கிறது. 10ம் வகுப்பு வாரியத் தேர்வில் அடிப்படை கணிதத்தைத் தேர்வுசெய்த மாணவர்களும் இதை கற்கலாம் . 2021ம் ஆண்டு கல்வியாண்டு முதல் மாணவர்களுக்கு இது கற்பிக்கப்படுகிறது
credit indianexpress.com