21 நாட்கள் பொது முடக்க காலநிலை வரும் ஏப்ரல் 14ம் தேதியோடு முடிவடைய இருக்கும் சூழ்நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் மாநில முதல்வர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். முடக்க நிலை தொடரலாமா அல்லது தளர்வு கொண்டுவரப்படுமா போன்ற முக்கிய கேள்விகளுக்கு பதில் இன்று உறுதியாகிவிடும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும், பஞ்சாப், ஒடிசா போன்ற மாநிலங்கள் தங்கள் ஊரடங்கை ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டித்துள்ளன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக 7,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று, செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார துறை அமைச்சக அதிகாரிகள், இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக அளவிலான பரவல் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
credit indianexpress.com