கொரோனா பரிசோதனை கருவிகளை வாங்க இந்தியா தாமதம் செய்துவிட்டதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பரிசோதனை கருவிகளை வாங்க, இந்தியா தாமதம் செய்ததால், தற்போது பரிசோதனை கருவிக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக குற்றம்சாட்டியுள்ளார். 10 லட்சம் பேருக்கு 149 என்ற வீதத்திலேயே இந்தியாவில் தற்போது பரிசோதனை கருவிகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிக அளவு பரிசோதனைகளை மேற்கொள்வதே, கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான வழி என்றும், ஆனால், அந்த வசதி தற்போது நம்மிடம் இல்லை என்றும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.
credit ns7.tv