இந்த வாரம், அரசாங்கத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம், வீட்டில் தயாரிக்கப்பட்ட முக கவசங்கள் எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்த விரிவான கையேட்டை வெளியிட்டது. மேலும், அதை அடர்த்தியான மக்கள் வசிக்கும் பகுதிகளில் வசிப்பவர்கள் தங்களை நாவல் கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பரிந்துரைத்தது. இதன் மூலம் நோய்த் தொற்று இல்லாத அல்லது பாதிக்கப்பட்ட எவருடனும் நெருங்கிய தொடர்பு இல்லாதவர்கள் என அனைவருக்கும் முகமூடிகள் அதிகாரப்பூர்வமாக பரிந்துரைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
எல்லோரும் முககவசம் அணிய தேவையில்லை என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் முன்பு கூறியிருந்தது. அந்த அறிவுறுத்தல் இன்னும் அப்படியே உள்ளது. இதே போல, உலக சுகாதார அமைப்பு (WHO)நோய்த்தொற்று இல்லாதவர்கள் நோய்வாய்ப்பட்டவர்களை கவனித்துக்கொண்டால் மட்டுமே முக கவசம் அணிய வேண்டும் என்ற ஒரு பரிந்துரையை அளித்துள்ளது. அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையங்கள் (சி.டி.சி) இதே பரிந்துரையை அளித்துள்ளன. இருப்பினும் அந்த பரிந்துரை இப்போது மறுபரிசீலனை செய்யப்படுகிறது.
வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க முகக் கவசம் எப்படி உதவுகிறது?
மூக்கு, வாயை மூடுவதன் மூலம் முகக் கவசம் வைரஸ் சுவாசக்குழாய்க்குள் செல்வதற்கான வாய்ப்பைக் குறைக்கின்றன. COVID-19 நோய்க்குப் பின்னால் உள்ள SARS-CoV2, வைரஸ் ஒருவர் இருமும்போது காற்றில் வெளியாகும் நீர்த்துளிகள் மூலம் பரவுகிறது. நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் ஆய்விதழ், சமீபத்தில் வெளியிட்ட ஆராய்ச்சி கட்டுரையில், இந்த வைரஸ் மூன்று மணி நேரம் வரை காற்றில் இருக்கக்கூடும் என்று கூறியுள்ளது. இந்த வைரஸ் பிளாஸ்டிக், எஃகு மற்றும் செம்பு ஆகியவற்றின் மேற்பரப்புகளில் பல மணி நேரம் உயிர்வாழும் என்றும் அறியப்படுகிறது. மேலும், மக்கள் இந்த மேற்பரப்புகளைத் தொட்டு பின்னர் அவர்களின் வாய் அல்லது மூக்கைத் தொடும்போது ஆபத்து உள்ளது. இந்த சூழ்நிலைகளில் ஒரு முகக் கவசம் கையில் இருப்பது உதவியாக இருக்கும்.
அறிகுறியற்ற நோயாளிகளாலும் இந்த வைரஸ் பரவுகிறது. எனவே, பொது இடங்களில், பாதிக்கப்பட்ட நபர் அருகில் இருக்கிறாரா, இல்லையா என்பதை ஒருவர் உறுதியாக கூற முடியாது.
முக கவசங்களை அணிவதற்கு எதிரான முந்தைய ஆலோசனை பரிசீலனை
இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், சுகாதார நிபுணர்களுக்குத் தேவையான தொழில்முறை தரமான முக கவசங்களில் எந்தவிதமான தட்டுப்பாடும் இல்லை என்பதை உறுதிசெய்வது ஆகும். அவர்கள் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அருகாமையில் இருப்பதால் அதிகபட்ச ஆபத்தில் உள்ளனர். அது போலவே, உலகளவில் தொழில்முறை முகமூடிகளுக்கு கடுமையான பற்றாக்குறை உள்ளது. ஏனெனில், அதற்கு பெரிய அளவில் தேவை உள்ளது.
குறிப்பிட்ட நேரத்திற்கு வைரஸ் காற்றில் இருக்கும் என்று தெரியாத நிலையில், அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்ற இந்த ஆலோசனை வந்துள்ளது. கொரோனா வைரஸ் நாவல் உண்மையில் மூன்று மணி நேரம் வரை காற்றில் வாழ முடியும் என்பதைக் காட்டும் ஆராய்ச்சி மார்ச் மாதத்தில் தான் வெளியிடப்பட்டது. அதுவரை, நோயாளிகள், குறிப்பாக இருமல் பாதிப்புக்குள்ளானவர்கள் மற்றும் ஒரு நோயாளியை கவனித்துக்கொள்பவர்கள், குடும்ப உறுப்பினர்கள் அல்லது சுகாதார வல்லுநர்கள் போன்றவர்கள் மட்டுமே முகமூடி அணிய அறிவுறுத்தப்பட்டனர். பொது மக்கள் முகக் கவசம் அணிவதை ஊக்கப்படுத்தினர். இப்போது, சமீபத்திய ஆராய்ச்சி மறுபரிசீலனை செய்ய கட்டாயப்படுத்துகிறது.
தொழில்முறை முக கவசங்கள் எந்தளவுக்கு பயனுள்ளதாக இருக்கும்?
0.3 மைக்ரான் அல்லது அதற்கு மேற்பட்ட அளவுள்ள முகக் கவசங்கள் காற்றில் குறைந்தது 95% துகள்களையாவது தடுக்க முடியும் என்பதால் (1 மைக்ரான் ஒரு மீட்டரின் மில்லியனில் ஒரு பங்கு) அதனால், அதிக தேவை உள்ள அந்த முகக் கவசம் N95 என அழைக்கப்படுகிறது. ஒற்றை SARS-CoV2 வைரஸ் பொதுவாக 0.2 மைக்ரான் அளவு வரை இருக்கும், எனவே இது N95 முகமூடியை ஊடுருவக்கூடும். ஆனால் மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் நிறுவனத்தின் பேராசிரியரும், பொது மக்கள் சேவைத்துறையின் தலைவருமான அர்னாப் பட்டாச்சார்யா கூறுகையில், “மருத்துவ ஊழியர்கள் அணியும் வழக்கமான அறுவை சிகிச்சை முகமூடிகளை விட N95 கள் மிகச் சிறந்தவை, இதன் முக்கிய நோக்கம் அணிந்திருப்பவரின் உமிழ்நீரின் பெரிய துளிகளால் வெளியே செல்வதைத் தடுக்கிறது. எடுத்துக்காட்டாக ஒரு அறுவை சிகிச்சையின் போது உமிழ்நீர் துளிகள் வெளியே செல்வது தடுக்கப்படுகிறது.
வீட்டில் தயாரிக்கப்பட்ட முக கவசங்கள் பற்றி?
தொழில்முறை முகமூடிகளைப் போல வெளிப்புறத் துகள்களைத் தடுப்பதில் வீட்டில் தயாரிக்கப்பட்ட முகமூடிகள் பயனுள்ளதாக இருக்காது. ஆனால், அவை முகக் கவசம் இல்லாததை விட நல்லது. பருத்தி துணியால் செய்யப்பட்ட எளிய முக கவசங்கள் பெரிய துகள்களை வெளியேயே தடுக்கின்றான. மேலும், இவை பல முறை கழுவப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படலாம்.
முக கவசம் பற்றிய சமீபத்திய பரிந்துரை என்ன?
முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட கையேடு, மக்கள் வீட்டில் தயாரிக்கும் முகமூடிகளை அணிய வேண்டும் என்று கடுமையாக பரிந்துரைக்கிறது. இருப்பினும் அது போதுமானதாக இருக்காது என்று சுட்டிக்காட்டுகிறது. உலக சுகாதார அமைப்பை மேற்கோள் காட்டி, “ஆல்கஹால் அடிப்படையிலான கை துடைப்பான் அல்லது சோப்பு மற்றும் தண்ணீரைக் கொண்டு அடிக்கடி கை சுத்தம் செய்வதன் மூலம் மட்டுமே முக கவசம் பயனுள்ளதாக இருக்கும்” என்று கூறுகிறது. வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு சுத்தமான முக கவசங்களின் பயன்பாடு இன்றியமையாததாக இருக்கும் என்றும் அது கூறுகிறது. மேலும் இவை “குறிப்பாக இந்தியா முழுவதும் அடர்த்தியான பகுதிகளில் வாழும் மக்களுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன” என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட கையேடு, 100 சதவிகித பருத்தி துணியால் செய்யப்பட்ட வீட்டில் தயாரிக்கப்பட்ட இரட்டை அடுக்கு மாஸ்க் சிறிய துகள்களைத் தடுப்பதில் ஒரு அறுவை சிகிச்சை முக கவசத்தைப் போல 70 சதவிகிதம் பயனுள்ளதாக உள்ளது. இதன் துகள்கள் நாவல் கொரோனா வைரசை விட ஐந்து மடங்கு சிறியது என்று கூறப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சகம் மற்றும் உலக சுகாதார அமைப்பின் பொது ஆலோசனைகள் ஒரே மாதிரியாக இருக்கும் நிலையில், அமெரிக்காவில் உள்ள சி.டி.சி அனைத்து அமெரிக்கர்களுக்கும் பொது இடங்களில் துணி முக கவசங்களை அணிவதற்கு அறிவுறுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது என்று வெள்ளிக்கிழமை தி நியூயார்க் டைம்ஸில் வெளியான ஒரு செய்தி தெரிவிக்கிறது.