ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க கடை திறப்பு நேரம் மாற்றம்!

தமிழகத்தில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை என கடைகள் திறப்பதற்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முறை நாலை முதல் அமலுக்கு வருவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், கொரோனா தெடுப்பு நடவடிக்கைகளுக்கு அரசின் முயற்சியோடு, மதத்தலைவர்கள், தன்னார்வலர்கள் என அனைவரின் ஒத்துழைப்பு தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக பரவலைக் கட்டுப்படுத்த, வரக்கூடிய பண்டிகை காலங்களில் மதக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சாதி, மாத பேதமின்றி அனைவரையும் கொரோன தாக்குவதால், அதற்கு மதச்சாயம் பூச வேண்டாம் என்று அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தனியார் மருத்துவமனைகள் திறக்கப்படுவதில்லை என்கிற புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தனியார் மருத்துவமனைகள் நோய் தொற்று உள்ளவர்களை அன்போடும், பரிவோடும் நடத்த வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்கள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற விரும்பினால், அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு மன அழுத்தம் போன்ற பிரச்னைகளை தீர்க்க, மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மனநல மருத்துவர்கள் அடங்கிய குழுக்களிடம் தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்க சமூக ஆர்வலர்கள், அரசு தரப்போடு இணைந்து பணியற்றலாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 
அனைத்து பொது மக்களும் விதிமுறைகளை கடைபிடிக்கவும், அதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
credit ns7.tv