டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்க வந்தவர்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக, அங்கேயே தங்க வைக்கப்பட்டிருப்பதாக நிஜாமுதீன் தப்லீக் ஜமாஅத்தின் சர்வதேச தலைமையகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நிஜாமுதீன் தப்லீக் ஜமாஅத்தின் சர்வதேச தலைமையகத்தில் ஒரு ஆண்டுக்கு முன்பே திட்டமிட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் ஊரடங்கு அறிவித்த பின் நிஜாமுதீனில் நடந்த நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது எனவும், ரயில் சேவைகள் இல்லாததால் சிலர் செல்ல முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே நிஜாமுதீனில் சிலர் தங்க வைக்கப்பட்டதாகவும், அதேசமயம் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
credit ns7.tv