ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

நியூயார்க்கில் இரண்டரை நிமிடங்களுக்கு ஒரு உயிர்பலி!

Image
அமெரிக்காவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமான நியூயார்க்கில் ஒரே வாரத்தில் சுமார் 3 மடங்கு அளவிற்கு கொரோனா உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பிற்கு உலக வல்லரசு நாடான அமெரிக்காவும் தப்பவில்லை. அங்குள்ள அனைத்து மாகாணங்களிலும் கொரோனா பரவல் காணப்படும் நிலையில் நியூயார்க் மாகாணத்தில் கொரோனா தாக்குதல் அபாய கட்டத்தை அடைந்துள்ளது.
நியூயார்க்கில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல இங்கு மட்டுமே இதுவரை 3,500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று ஒரே நாளில் மட்டும் நியூயார்க்கில் 562 பேர் கொரோனாவினால் உயிரிழந்தனர். ஒவ்வொரு இரண்டரை நிமிடங்களுக்கும் ஒரு மரணம் நிகழ்வதாக அம்மாகாண ஆளுநர் ஆண்ட்ரூ கியோமோ தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கள் வரை 1,000 பேர் மட்டுமே மரணமடைந்த நிலையில் செவ்வாயன்று 1,550 ஆக உயர்ந்தது. தற்போதைய நேரம் வரை 3,565 பேர் நியூயார்கில் பலியாகியுள்ளனர். இது மும்மடங்கு உயர்வாகும். மேலும் ஒரே நாளில் அதிகபட்சமாக 10,2285 பேருக்கு அங்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
credit ns7.tv