ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

மார்ச் 24ல் டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தவர்களா நீங்கள்? April 05, 2020

டெல்லியில் இருந்து இரு விமானங்களில், சென்னை வந்தவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
photo
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட விளம்பரத்தில், மார்ச் 24-ந் தேதி டெல்லியில் இருந்து அதிகாலை 3.15 மணிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்திலும், மாலை 6.25 மணிக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானத்திலும் சென்னை வந்தவர்கள் தங்களை தாங்களே 28 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்று தொடர்பாக ஏதாவது அறிகுறி தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
credit ns7.tv

Related Posts: