ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

ஊரடங்கின்போது வீடுகள் பாதுகாப்பானவை அல்ல; தொடரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்

பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தக்கூடிய கடுமையான ஊடரங்கின்போது, வீடுகளில் பெண்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள். உடல் ரீதியாக, பாலியல், உணர்வு ரீதியாக மிக மோசமாக பாதிக்கப்படும் அபாய சூழலுக்கு பெண்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
credit : https://tamil.indianexpress.com/opinion/coronavirus-covid-19-coronavirus-and-domestic-violence-india-lockdown-183552/
சோஹினி பட்டாச்சார்யா
உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா தொற்று பேரழிவின் தடத்தை விட்டுச் சென்றிருக்கிறது. பெரும்பாலான நாடுகள் சமூக ரீதியாகவும், ஒருவரிடம்இருந்து பிறர் விலகி இருப்பதற்குமான சூழலுக்கு வழிவகுக்கும் வெவ்வேறு வகையான ஊடரங்கு உத்தரவுகளை அமல்படுத்தி உள்ளன. இந்த சிக்கலான சூழலில் இந்த கொள்கை முடிவுகள், அனைத்துக்கும் அடிப்படையான அடிப்படை அனுமானம் என்னவென்றால், பாலின பாகுபாடு இல்லாமல் நோய் தொற்று ஏற்படுத்தியிருக்கிறது
உண்மையில் இருந்து இது வெகுதூரம் விலகி இருக்க முடியாது.
உலக சுகாதாரப் பணியாளர்களில் 67 சதவிகிதம் பேர் பெண்கள். இயல்பாகவே அவர்கள் தொற்றால் பாதிக்கப்படக் கூடிய சூழலில் இருக்கின்றனர். ஆண்களை விட பெண்கள் மூன்று மடங்கு அதிக சம்பளம் பெறாத சுகாதாரப்பணிகளால் சுமையாக உள்ளனர். இந்த ஊடரங்கு காலத்தின்போது இது பன்மடங்காக அதிகரிக்கும். ஒருவரின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தக்கூடிய கடுமையான ஊடரங்கின்போது, பெண்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள். உடல் ரீதியாக, பாலியல், உணர்வு ரீதியாக மிக மோசமாக பாதிக்கப்படும் அபாய சூழலுக்கு பெண்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அரசின் உத்தரவின்படி உலகம் முழுவதும் மூடப்பட்டிருக்கின்றன. பணியாளர்கள் பெரும்பாலும் வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர். பெண்கள், சிறுமியர், பாலியல் சுரண்டலுக்கும், மோசமாக நடத்தபடுவதற்கும் மேலும் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருக்கின்றனர். 2014-ம் ஆண்டு எபோலா நோய் தொற்றின்போது மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் இதுபோல ஊரடங்கு உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டன. பணியிடங்கள் மூடப்பட்டன. பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. இதனால், அங்கு பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள், வன்முறைகள் அதிகரித்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சியரா லியோன் நாட்டில் பணியாற்றும் தன்னார்வ நிறுவனங்களின் கூற்றின்படி, வீடுகளில் இருந்த சிறுமிகள், இளம்பெண்கள் பெரும் அபாயங்களை சந்தித்தனர். பாலியல் தாக்குதல், பாலியல் வன்கொடுமைகளால் பெண்கள் இளம் வயதில் கர்ப்பம் அடைவது அதிகரித்தது என்பது தெரியவருகிறது. ஒட்டும்மொத்தமாக ஒரு ஆண்டுக்குள் பாலியல் வன்கொடுமைகள் 40 சதவிகிதம் அளவுக்கு அதிகரித்தன.
உலக அளவில் மூன்றில் ஒரு பெண், பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுகிறாள். 2015-16-ல் எடுக்கப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வு-4-ன்படி 15 முதல் 49 வயது வரையிலான 30 சதவிகிதப் பெண்கள், தங்களது 15-வது வயதில் இருந்து உடல் ரீதியான பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக தெரியவந்துள்ளது. இதே வயது காலகட்டத்தில் 6 சதவிகிதப் பெண்கள் வாழ்க்கையில் ஒரே ஒருமுறையாவது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்பதும் அதிர்ச்சித் தகவலாக இருக்கிறது. திருமணமானவர்களில் 31 சதவிகிதப் பெண்கள், தங்களின் கணவர் மூலம் உடல் ரீதியான, பாலியல் ரீதியான, உணர்வு ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது.
2018-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றப்படி, உலகம் முழுவதும் வீடுதான் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடமாக மாறி வருகிறது என்று தெரியவந்துள்ளது. பெரும்பாலான பெண்கள் கொலைகளில், அதிகபட்சமாக 85 சதவிகித பெண்கள் அவர்களின் புகுந்த வீடுகளில்தான் கொலை செய்யப்பட்டுள்ளனர். பெண்களின் கணவரோ அல்லது அந்த குடும்ப உறுப்பினர்களில் ஒருவரோ இந்த கொலைகளில் தொடர்பு கொண்டிருக்கின்றனர். சிறப்பு நிகழ்வுகளாக வரதட்சனை தொடர்பான மரணங்கள், கவுரவக் கொலைகள் இந்த அறிக்கயில் குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளன. பெண்களின் பிறந்த வீடும் கூட, அவர்களுக்கு மிகவும் அபாயகரமான இடமாக மாறி வருவதாகக் கூறப்படுகிறது.
சர்வதேச ஊடரங்கும் வீடுகளில் அதிகரிக்கும் வன்முறை சம்பவங்களும்
உலக அளவில் மேலும், மேலும் அதிகமான நாடுகள் ஊரடங்கு உத்தரவுகளை அமல்படுத்தியிருக்கும் சூழலில், அந்தந்த நாடுகளில் உள்ள பெண்கள் நல மையங்கள், பெண்கள் உதவி மையங்களுக்கு வரும் பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறை தொடர்பான புகார்கள் அதிகரித்திருக்கின்றன. சீனாவில் உள்ள ஹூபே மாநிலம் முதல் பிரேசில் வரை, பிரான்ஸ் முதல் இங்கிலாந்து வரை, அனைத்து பகுதிகளிலும் உள்ள நாடுகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்திருப்பது குறித்து கவனத்தில் கொண்டுள்ளன. சீனாவில் உள்ள, வூஹான் மாநிலத்தில் உள்ள ஹூபேயில்தான் கொரோனா வைரஸ் முதன் முதலில் தாக்கத் தொடங்கியது. இங்கு பிப்ரவரி மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அந்த மாதத்தில் மட்டும் வீடுகளில் உள்ள பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் அங்கு 47 பேர்தான் வீட்டு வன்முறையில் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த ஆண்டு அது 162 ஆக அதிகரித்திருக்கிறது. உள்ளூர் தன்னார்வலர்களின் தகவலின்படி, இதில் 90 சதவிகித நிகழ்வுகள் என்பது, கொரோனா தொற்றால் நடைமுறைக்கு வந்த ஊரடங்கின்போது நடந்தவை என்று தெரிய வருகிறது. பிரேசிலில் அரசு நடத்தும் பெண்கள் பாதுகாப்பு மையங்களுக்கு வருவோரின் எண்ணிக்கை 40-50 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. கட்டலோனியா முதல் சைப்ரஸ் வரை உள்ள ஐரோப்பிய நாடுகளில் பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறைகள் தொடர்பான உதவி எண்களுக்கு வரும் அழைப்புகள் எண்ணிக்கை 20-30 சதவிகிதம் அதிகரித்திருப்பது தெரியவந்திருக்கிறது. ஸ்பெயினில் ஊரடங்கு உத்தரவு மிகக் கடுமையான வகையில் பின்பற்றப்படுகிறது. ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்காதவர்களுக்கு அதிக அபராதம் விதிக்கப்பட்டது. வலென்சியாவில், பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறைகள் குறித்த புகார்கள் பதிவாகி இருக்கின்றன. பிரான்ஸ் நாட்டில் மார்ச் 17-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அது முதல் 30 சதவிகிதத்துக்கும் அதிகமான வீட்டு வன்முறை தொடர்பான நிகழ்வுகள் குறித்து புகார்கள் வந்துள்ளன என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறுகிறார். பாரீசில் மட்டும் இத்தகைய நிகழ்வுகள் 36 சதவிகிதம் அதிகரித்துள்ளன. இங்கிலாந்தில், தேசிய ஹாட்லைன் தொலைபேசிக்கு கடந்த வார இறுதியில் 65 சதவிகிதத்துக்கும் அதிகமான அழைப்புகள் வந்துள்ளன. ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தபோதிலும், பாதிக்கப்படும் பெண்கள் போலீஸில் உதவி கோரவும், அவர்கள் வீடு பாதுகாப்பானது இல்லை என்று உணர்ந்தால் அரசின் உதவியை கோரவும் செய்யலாம். அவர்களுக்கு உரிய உதவிகள் செய்யப்படும் என்று அமைச்சர் ப்ரீத்தி பாட்டீல் கூறி இருக்கிறார்.
இந்திய ஊரடங்கின்போது, குடும்ப வன்முறையின் தாக்கம்
இந்தியாவில், மார்ச் மாதத்தில் வீட்டு வன்முறை தொடர்பாக 291- புகார்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தேசிய பெண்கள் ஆணையம் தெரிவித்துள்ளது. இப்போது இ-மெயில் வழியாக மட்டும் புகார்கள் பெறப்படுகின்றன. தன்னார்வ நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் வைத்திருக்கும் உதவி எண்களுக்கு பெண்கள் கொடுமைப்படுத்துவதாக வரும் அழைப்புகள் முன் எப்போதையும் விட குறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது. பெரும்பாலான தன்னார்வலர்கள், இந்த உதவி முகாம்களுடன் தொடர்புடைய வல்லுநர்கள், கீழ்மட்ட அளவில் வீட்டு வன்முறை தொடர்பான நிகழ்வுகள் தொடர்பான விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபடுபவர்களின் கருத்து என்பது, பெண்களை தொந்தரவு செய்பவர்கள் வீட்டிலேயே இருப்பதால், பெண்கள் தனியாக வந்து புகார் தெரிவிப்பது என்பது குறைந்திருக்கிறது என்று அச்சம் தெரிவிக்கின்றனர். நடமாட்டம் குறைக்கப்பட்டிருப்பது, பாலியல் ரீதியிலான வன்முறை மீது போலீசாரின் அக்கறையின்மை, துஷ்பிரயோகத்தில் இருந்து அவர்களை காப்பாற்றக்கூடிய வழிகளைக்கூட பெண்கள் இழக்கின்றனர். சில தீவிரமான நிகழ்வுகளில் மரணம் கூட ஏற்படலாம்.
வீட்டு வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ், வீட்டு வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கான முதல் பாதுகாவலராக போலீஸார் இல்லை.வன்முறை தடுப்பு ஆலோசனை மையங்கள்தான் பாதிக்கப்பட்டு புகார் அளித்த பெண்களை அணுகக் கூடியவர்களாக இருக்கின்றனர். ஊரடங்கு உத்தரவின் காரணமாக, இந்த சேவைகளும் கிடைக்காமல் இருப்பது, தேவைப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போவது அவர்களுக்கு ஆபத்தானதாகும். ஹரியானாவில் பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உடனடி மருத்துவ உதவிகள் அளிப்பதற்கான சுகூன் என்ற மையங்கள் மகளிர் மருத்துவ மையங்களுக்கு அருகே, அமைக்கப்பட்டன. ஆனால் இந்த மையங்களும் இப்போது மூடப்பட்டுள்ளன. அபாயமான சூழல்களில் இருந்து பெண்களைப் பாதுகாக்க விரைவாக அவர்களை மீட்க, நேரடியான மாற்று எச்சரிக்கை முறை இந்தியாவுக்கு அவசியத் தேவையாகும். உ.பி-போலீஸார் அவசர உதவி எண் 112-ஐ அறிவித்துள்ளனர். இது வீட்டு வன்முறை தொடர்பாக புகார் அளிக்கும் உதவி எண் அல்ல. வன்முறை குற்றங்கள் தொடர்பாக எச்சரிக்கைத் தகவல்கள் அனுப்பக் கூடிய எண் என்று சொல்கின்றனர். தவிர, உதவி எண் குறித்து போதுமான எந்த தகவல்களும் இங்கு இல்லை.
ஊரடங்கின்போது பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசுக்கு பரிந்துரைகள்
ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ், உலகம் முழுவதும் வீட்டு வன்முறை அதிகரித்திருப்பது, அதிர்ச்சிதரக்கூடியதாக இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள அரசுகள், கொள்கைகளை அமல்படுத்தும்போது, இந்த பிரச்னை குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளார். பிரான்ஸ் நாட்டின் பாலின சமத்துவத்துக்கான அமைச்சர் , பாதிக்கப்படும் பெண்கள் தங்குவதற்காக 20,000 ஹோட்டல் அறைகள், பெண்கள் எளிதாக புகார் அளிக்கும் வகையில் மளிகைக்கடைகளில் பாப்-அப் கவுன்சிலிங் மையங்கள் அமைக்க நிதி உதவி அளிக்கப்படும் என்று கூறி உள்ளார். அதே போல ஸ்பெயினில் பாதிக்கப்படும் பெண்கள், மருந்துகடைகளுக்குச் செல்லும்போது மாஸ்க் 19 என்ற மறைமுக குறியீட்டு வார்த்தையைக் கூறினால் உடனே எச்சரிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தன்னார்வலர்கள் உதவியுடன் அவர்கள் மீட்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இப்போதைய சூழலில் அரசுக்கான பரிந்துரைகள்
அரசானது மிகவும் ஒடுக்கப்பட்டோர் உட்பட ஒவ்வொருவக்கும் இப்போதைய சிகலான சூழலில் தேவையான தகவல்களை பெறுவது, ஆதரவு முறைகள் மற்றும் வளங்களை பெறுவது பாகுபாடற்ற அணுகுமுறையை மேற்கொள்வது, மனித உரிமையை உபயோகிப்பது சிக்கலானதாகும்.
அத்தியாவசிய சேவைகளுக்கான உதவி எண்களை மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும். ஊடரங்கின்போது அவை தொடர்ந்து செயல்படுவதாக இருக்க வேண்டும். தயாராக இருக்கும் சேவைகள் , வளங்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். பாலியல் ரீதியான பாகுபாடு குறித்த வன்முறை தகவல்களை பரப்ப வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சட்ட உதவி, ஆலோசனை, இருப்பிட உதவி உள்ளிட்டவை அளிக்கும் தன்னார்வ அமைப்புகள் வீட்டு வன்முறைகளில் பாதிக்கப்படுவோரை பாதுகாக்க உடனடியாக செயல்படும் அமைப்புகளுக்கான வளங்களை அதிகரிக்க வேண்டும். தொடர்ந்து அவர்கள் செயல்படுவதை முன்னெடுக்க வேண்டும்.
வீடுகளில் இருக்கும் வேலைகளை சரி சமமாக பகிர்ந்து மேற்கொள்வதை ஊக்குவிக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு தொடர்பில்லாத அதே நேரத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குத் தேவைப்படும் பரிசோதனைகள், மருத்துவம் தொடர்பான ஆராய்ச்சிகள், சுகாதார சேவைகள் தொடர்பான பொருட்களை தொடர்ந்து அளிக்க வேண்டும்.
இந்த சிக்கலான தருணத்தில், தாய்வழி சுகாதார சேவைகள், பாதுகாப்பான முறையில் குழந்தை பிறப்பதற்கான அறுவை சிகிச்சை உட்பட பெண்களுக்கு ஒருங்கிணைந்த பாலின மற்றும் இனபெருக்க சுகாதார சேவைகள் சரியான நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கு ஊடரங்கின்போது தனிப்படுத்தப்பட்டு பொதுமக்கள் வீட்டுக்குள் இருப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்படலாம் என்று தெரிகிறது. மத்திய , மாநில அரசுகள் அதிகரித்து வரும் வீட்டு வன்முறை நிகழ்வுகளை உடனடியாக கவனித்து தடுக்க வேண்டும். பொதுவாக நாம் எல்லோரும் நம்புவதுபோல, வீடு என்பது பெரும்பாலான பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை. பெண்களின் வாழ்க்கை என்பது, அவர்களுக்கான அவசரகால உதவி சேவைகள் தொடர்ந்து இயங்குவதில்தான் இருக்கிறது.
இந்த கட்டுரையின் எழுத்தாளர், Breakthrough India and US என்ற தன்னார்வ‍ அமைப்பின் சி.இ.ஓ & தலைவர்